முதுகு வலி பிரச்சனை ஒழிய பாட்டி சொன்ன வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!!
நாம் அனைவரும் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று முதுகு வலி.ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல்,முதுகு தண்டு வளைந்த படி உட்காருதல் போன்றவற்றால் ஏற்படுகிறது.எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாவிட்டாலும் இந்த முதுகு வலி பிரச்சனை ஏற்படும்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு விடுகிறது.தினசரி உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களை சேர்ப்பது மிகவும் அவசியம்.துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.
நீண்ட நாட்களாக முதுகு வலியால் அவதிப்படும் நபர்கள் பூண்டு,மிளகு உள்ளிட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை பாலில் சேர்த்து பருகி வந்தால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
*பால் – 2 டம்ளர்
*பூண்டு – 7 பற்கள்
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
*தேன் – தேவையான அளவு
செய்முறை:-
1) அடுப்பில் டீ பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் பால் ஊற்றி கொள்ளவும்.மிதமான தீயில் கொதிக்க விடவும்.
2)நல்ல பூண்டு பற்கள் 7 முதல் 8 எடுத்து அதை சிறிதளவு தட்டி அந்த பாலில் சேர்க்கவும்.2 டம்ளர் பால் சுண்டி 1 டம்ளராக வரும் வரை காய்ச்சி கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.
3)ஒரு டம்ளரில் ஊற்றி அதில் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி மற்றும் மிளகு தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும்.
4)பின்னர் சுவைக்கேற்ப தேன் கலந்து பருகவும்.தேவைப்பட்டால் பாதம் பருப்பு,முந்திரி பருப்பை பாலில் சேர்த்து காய்ச்சி பருகலாம்.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் நீண்ட நாள் முதுகு வலி விரைவில் சரியாகி விடும்.