தாங்க முடியாத இடுப்பு வலியை சட்டுனு விரட்டும் பாட்டி மருந்து!!

0
205
#image_title

தாங்க முடியாத இடுப்பு வலியை சட்டுனு விரட்டும் பாட்டி மருந்து!!

இளம் தலைமுறையினரை பெரிதளவில் பாதிக்கும் இடுப்பு வலி அதிக வேலைப்பளு, உடல் பருமன், முதுமை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகிறது. அதிக நேரம் குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. இதை குணமாக்க பாட்டி வைத்தியத்தை தொடர்ந்து கடைபிடித்து வரவும்.

1)சூடம்
2)தண்ணீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் ஒரு கட்டி சூடம்(கற்பூரம்) சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

சூடம் சேர்த்த நீர் இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது ஒரு காட்டன் துணியில் நினைத்து இடுப்பில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் இடுப்பு வலி முழுமையாக குணமாகும்.

1)அரிசி வடித்த கஞ்சி
2)சீரகம்
3)உப்பு

ஒரு கிண்ணத்தில் அரிசி வடித்த கஞ்சி ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் உப்பு போட்டு குடித்தால் இடுப்பு வலி முழுமையாக குணமாகும்.

1)கல் உப்பு
2)தண்ணீர்
3)கற்பூரம்

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு மற்றும் 2 கற்பூரத்தை போட்டு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விடவும். சூடு பொறுக்கும் அளவிற்கு வந்ததும் காட்டன் துணியில் நினைத்து இடுப்பில் வலி உள்ள இடத்தில் மஜாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் இடுப்பு வலி முழுமையாக குணமாகும்.