Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!!

Grandma's Miracle Remedy to Disappear Pimples and Blackheads!!

Grandma's Miracle Remedy to Disappear Pimples and Blackheads!!

முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!!

ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக முகப்பரு இருக்கின்றது.ஆண்களை விட பெண்களுக்கு தான் முகப்பரு பற்றிய கவலை அதிகம் உள்ளது.இந்த முகப்பரு நம் இளம் பருவத்தில் தோன்ற ஆரமிக்கிறது.இந்த முகப்பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி நம்முடைய அழகை கெடுத்து முகத்தை பொலிவற்றதாக மாற்றி விடுகிறது.

மேலும் இந்த முகப்பரு கொழுப்பு நிறைந்த உணவு,மன அழுத்தம் மற்றும் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மையால் ஏற்படுகிறது.இதற்கு தொடர்ந்து தண்ணீர் குடித்து வருதல்,அதிக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்த்தல்,குளிர்ச்சி நிறைந்த உணவுகளை எடுத்து வருதல் உள்ளிட்டவற்றை கடை பிடிப்பதன் மூலம் பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.இதையடுத்து வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கொண்டும் முக பருக்களை மறைய வைக்க முடியும்.

தேவையான பொருட்கள்:-

*உருளைக்கிழங்கு

*பால்

*மஞ்சள்

செய்முறை:-

முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் நீங்கி பின் பீலர் கொண்டு சீவி எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு அவற்றை ஒரு டீ வடிகட்டியில் போட்டு நன்கு பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.அவற்றில் இருந்து 4 ஸ்பூன் அளவு உருளைக்கிழங்கு சாற்றை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஊற்ற வேண்டும்.பிறகு 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து மூன்றையும் நன்கு கலக்கி கொள்ளுதல் வேண்டும்.

இதற்கு அடுத்து காட்டன் பஞ்சு ஒன்றை எடுத்து தயார் செய்து வைத்துள்ள ரெமிடியில் நினைத்து முகத்தில் மஜாஜ் செய்ய வேண்டும்.இதற்கு முன்னதாக முகத்தை சுத்தமான நீரைக் கொண்டு நன்கு கழுவுதல் அவசியம் ஆகும்.பிறகு இதனை ஒரு அரை மணி நேரம் முகத்தில் இருக்கும்படி செய்து பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் 7 நாட்களில் முகத்தில் காணப்பட்ட பருக்கள்,கரும்புள்ளிகள்,கருமை உள்ளிட்ட அனைத்தும் நீங்கி முகம் அழகாகவும்,பொலிவாகவும் காணப்படும்.

Exit mobile version