Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாட்டி வைத்தியம்: இதை ஒரு கிளாஸ் குடித்தால் சளி தொல்லை இனி இல்லை!!

#image_title

பாட்டி வைத்தியம்: இதை ஒரு கிளாஸ் குடித்தால் சளி தொல்லை இனி இல்லை!!

சளி பாதிப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.ஆனால் அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் அதை அலட்சியப் படுத்தாமல் சரி செய்து கொள்ள வேண்டும்.

இதற்காக மருந்து மாத்திரை அதிகளவு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும்.இதற்கு பதில் பாலில் மஞ்சள்,மிளகு போன்ற பொருட்களை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பால் – ஒரு கிளாஸ்
2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)மிளகு – 5
4)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
5)தேன் (அல்லது) பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் ஐந்து மிளகை மிக்ஸி அல்லது உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இடித்த கொத்தமல்லி விதை மற்றும் மிளகை அதில் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் அதில் சுவைக்காக தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்கவும்.இந்த பால் சளி,இருமலை உடனடியாக போக்கும்.

Exit mobile version