அல்சர் புண் குணமாக பாட்டி சொன்ன ரகசிய வைத்திய குறிப்பு!

0
258
#image_title

அல்சர் புண் குணமாக பாட்டி சொன்ன ரகசிய வைத்திய குறிப்பு!

உணவை தவிர்த்தல், மோசமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடித்தல், செரிக்காத உணவை உண்ணுதல், காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றால் அல்சர் புண் உருவாகிறது.

இதை செலவின்றி ஆரோக்கியமான முறையில் எவ்வாறு குணப்படுத்தி கொள்ளலாம் என்பது குறித்த விளக்கம் இதோ.

குறிப்பு 01:-

ஒரு துண்டு மஞ்சள் விளக்கு தீயில் சுட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அதில் 1/2 ஸ்பூன் சீரகத் தூள் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை நேரத்தில் சாப்பிட்டால் அல்சர் புண் குணமாகும்.

குறிப்பு 02:-

ஒரு கப் தேங்காய் துருவலை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்து பருகி வந்தால் அல்சர் புண் ஆறும்.

குறிப்பு 03:-

மணத்தக்காளி காயை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

குறிப்பு 04:-

1 கப் தயிர் மற்றும் 1/4 கப் கற்றாழை தோல் நீக்கிய கற்றாழை துண்டுகளை அரைத்து வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் புண் பாதிப்பு குணமாகும்.

குறிப்பு 05:-

பிரண்டை 1/2 கப், பூண்டு பல் 5, திப்பிலி 2, பசு மோர் 1 கிளாஸ் அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் நறுக்கிய பிரண்டை, பூண்டு மற்றும் திப்பிலி சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தினால் அல்சர் நோய் குணமாகும்.