மூச்சு பிடிப்பை விரட்டும் பாட்டி காலத்து டெக்னிக்!! இதை விட சிறந்த வைத்தியம் இருக்க முடியாது!!

0
147
Grandma's technique to get rid of shortness of breath!! There can be no better remedy than this!!

மூச்சு பிடிப்பை விரட்டும் பாட்டி காலத்து டெக்னிக்!! இதை விட சிறந்த வைத்தியம் இருக்க முடியாது!!

உங்களில் பலர் மூச்சு பிடிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.மூச்சு பிடிப்பு ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.எடை தூக்குதல்,மார்பு எலும்புகளில் உள்ள தசை நார்களில் பிரச்சனை ஏற்படுதல்,ஆஸ்துமா,சளி,செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் மூச்சு பிடிப்பு ஏற்படும்.

இந்த மூச்சு பிடிப்பை இயற்கை முறையில் சரி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தீர்வு 01:-

1)ரூபாய் நாணயம்
2)காட்டன் துணி
3)கண்ணாடி டம்ளர்

சிறிய காட்டன் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து சுற்றிக் கொள்ளவும்.திரி போன்ற அமைப்பில் அவை இருக்க வேண்டும்.பின்னர் மூச்சு பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் அதை வைத்து நுனியில் பற்ற வைக்கவும்.அதன் பிறகு ஒரு கண்ணாடி கிளாஸை கொண்டு அதை மூடவும்.இவ்வாறு செய்தால் சில நிம்டங்களில் மூச்சு பிடிப்பு சரியாகும்.

தீர்வு 02:-

1)வெற்றிலை
2)பெருங்காயத் தூள்

ஒரு வெற்றிலையில் 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து மடக்கி சாப்பிட்டால் மூச்சு பிடிப்பு பிரச்சனை சரியாகும்.

தீர்வு 03:-

1)அரிசி மாவு
2)சுக்கு பொடி
3)பெருங்காயத் தூள்
4)கட்டி கற்பூரம்
5)தண்ணீர்

ஒரு தாளிப்பு கரண்டி எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு,ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி,1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் மற்றும் ஒரு கட்டி கற்பூரத்தை தூள் செய்து சேர்க்கவும்.

அதன் பின்னர் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.இந்த தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நன்கு கலக்கவும்.தண்ணீர் சுண்டி பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த பேஸ்ட் இளஞ்சூடாக இருக்கும் பொழுது மூச்சு பிடிப்பு ஏற்பட்டிற்கும் பகுதியில் தடவி விடவும்.இவ்வாறு தொடர்ந்து 3 தினங்கள் செய்து வந்தால் மூச்சு பிடிப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடக்கும்.

தீர்வு 04:-

1)உலக்கை

மூச்சு பிடிப்பு ஏற்பட்ட நபரை குப்புற படுக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் உலக்கை எடுத்து அவரது முதுகில் வைத்து அழுத்தி உருட்ட வேண்டும்.இவ்வாறு செய்யும் பொழுது முதுகில் இருந்து சத்தம் வந்தால் மூச்சு பிடிப்பு நீங்கிவிட்டது என்று அர்த்தம்.அதன் பின்னர் ஒரு பல் பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட வேண்டும்.