Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலியை நிமிடத்தில் குணமாக்கும் பாட்டியின் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

#image_title

மூட்டு வலியை நிமிடத்தில் குணமாக்கும் பாட்டியின் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

தற்காலத்தில் உடலில் நோய் பாதிப்பு என்பது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சந்தித்து வரும் பெரும் பாதிப்புகளில் ஒன்று மூட்டு வலி. இவை ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறை பழக்கம் உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்படுகிறது.

இந்த மூட்டு வலி ஏற்படத் தொடங்கி விட்டால் அதை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த பாதிப்பால் எளிய வேலைகளை கூட செய்வதற்கு சிரமம் ஏற்படும்.

மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-

ஆரோக்கியமற்ற உணவு, மரபு வழி, உடல் உழைப்பு குறைவு, சர்க்கரை நோய், காச நோய்,
ஜவ்வு மற்றும் எலும்பு தேய்மானம் தேய்மானம், வயது மூப்பு, வேலை பளு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் பருமன் உள்ளிட்டவைகள் மூட்டு வழி ஏற்படக் காரணங்களாக சொல்லப்படுகிறது.

மூட்டு வலி பிரச்சனைக்கு உரியத் தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*பூண்டு

*சோம்பு

*மஞ்சள்

*மிளகு

*தேங்காய் பால்

*தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் அளவு தேங்காய் பால் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி சோம்பு, 5 மிளகு, இடித்த பூண்டு பல் ஒன்று சேர்க்கவும்.

பிறகு மஞ்சள் சிட்டிகை அளவு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சுவைக்காக சிறிதளவு தேன் சேர்த்து பருகாலம். காலை, மலை என இருவேளையும் பருகி வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு மற்றும் முழங்கால் வலி குணமாகும்.

Exit mobile version