தாய் மற்றும் சகோதிரிகளை ஏமாற்றி வாங்கிய சொத்தை மகனிடமிருந்து மீட்டு தர மூதாட்டி மனு
தாய் மற்றும் சகோதரிகளை ஏமாற்றி வாங்கிய சொத்தை மகனிடம் இருந்து மீட்டுத்தக்கோரி 82 வயது மூதாட்டி வேலூர் DRO அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம், சரகுப்பம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி அமராவதி(82). இவருக்கு 4 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். நடராஜன் உயிரோடு இருக்கும் போது தனது நிலத்தை தனது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
மீதம் இருந்த சுமார் 2 ஏக்கர் நிலம் தாய் அமராவதி மீது இருந்துள்ளது. இந்நிலையில் இவரது இளையமகன் ரவி என்பவர் 2 ஏக்கர் நிலத்தை 3 தங்கை மற்றும் தாய்க்கு பிரித்து எழுதி வைப்பதாக கூறி அழைத்து சென்று மொத்த சொத்தையும் தானமாக ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார்.
இதனை அறியாத சகோதரிகள் தங்கள் நிலத்துக்குண்டான பட்டாவை கேட்ட போது, பட்டா இல்லை என்றும் அது தன்னுடைய சொத்து என கூறி தாய் அமராவதியையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
இதனையடுத்து தங்களுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தை இவரது இளைய மகன் ரவி என்பவர் தனது தாய்க்கும், 3 சகோதரிகளுக்கும் நிலத்தை பாகம் பிரித்து தருவதாக பத்திர பதிவு அலுவலகத்துக்கு அழைத்து சென்று மொத்த சொத்தையும் ஏமாற்றி தானே எழுதிக்கொண்டு தாயை வீட்டை விரட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே ஏமாற்றி வாங்கிய சொத்தை மீட்டு தரக்கோரி மூதாட்டி அமராவதி இன்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தார். சொத்தை ஏமாற்றி எழுதிய ரவி மாதனூர் அடுத்த உள்ளியில் உள்ள அரசு டாஸ்மாக்கில் சூப்பரைசராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.