பாட்டி வைத்தியம்.. தீராத நெஞ்சு சளி பாதிப்பை நிமிடத்தில் சரி செய்ய இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!
நெஞ்சு சளி பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவற்றை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.
சாதாரண சளி பாதிப்பு தான் மார்பில் தேங்கி நாளடைவில் நெஞ்சு சளியாக மாறி நம்மைப் படுத்தி எடுக்கிறது.
நெஞ்சு சளிக்கான அறிகுறி:-
*அதிக சளி
*வறட்டு இருமல்
*தும்மல்
*நெஞ்செரிச்சல்
*தொண்டை எரிச்சல்
*தொண்டை கரகரப்பு
*ஈளை நோய்
*இளைப்பு மற்றும் உடல் சோர்வு
*காய்ச்சல் வருவது போல் உணர்வு
*தலைவலி மற்றும் தலை பாரம்
*மூக்கில் நீர் வடிதல்
*மூக்கடைப்பு மற்றும் மூச்சிவிடுவதில் சிரமம்
இந்த நெஞ்சு சளி பாதிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும்.
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் எண்ணெய்
*சூடம்
செய்முறை:-
அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அதை மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடம் சூடு படுத்தி அடுப்பை அணைக்கவும்.
அடுத்து 2 சூடத்தை அதில் போட்டு கலக்கி கொள்ளவும். இந்த எண்ணெயை நெஞ்சு மேல் தடவுவதன் மூலம் தீராத நெஞ்சு சளி பிரச்சனை உடனடியாக சரியாகிவிடும்.
நெஞ்சு சளி நீங்க மேலும் சில தீர்வுகள்:-
1)ஒரு பவுலில் 5 அல்லது 6 புதினா இலைகளை போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை வாயில் போட்டு மெல்லவும். அதோடு 3 முதல் 4 கருப்பு மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வர நெஞ்சு சளி பாதிப்பு முழுமையாக சரியாகிவிடும்.
2)ஒரு உரலில் 4 கருப்பு மிளகு சேர்த்து இடித்துக் கொள்ளவும். பின்னர் பெரு பவுலில் இதை சேர்த்து அத்தோடு 1/4 டம்ளர் பெரு நெல்லி சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்து பருகினால் நெஞ்சு சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு விரைவில் சரியாகி விடும்.