Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சளி,காய்ச்சல்,இருமல் இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்! உடனே விரைந்து செய்யுங்கள்!

Grandmother's remedy is the only solution for colds, flu and coughs! Do it right away!

Grandmother's remedy is the only solution for colds, flu and coughs! Do it right away!

சளி,காய்ச்சல்,இருமல் இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்! உடனே விரைந்து செய்யுங்கள்!

கொரோனா தொற்றானது இக்காலத்தில் அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவுவதை தடுக்க  மக்கள் விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி சிறு சளி,இரும்பல்  ஏற்பட்டாலே இந்நேரத்தில் கொரோனா தொற்று தான் என மக்கள் பயந்துக்கொள்கின்றனர்.அந்த சிறு சளி,இரும்பல் மற்றும் காய்ச்சல் நோயை குணபடுத்தும் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்.அதனை ஓர் வாரம் தொடர்ந்து எடுத்து வர சளி,இருமல் என அனைத்தும் குணமாகும்.

சளி அகற்ற:

துளசி இழைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.அதனை நன்கு அரைத்து அதனுடைய சாற்றை குடித்து வர சளி நீங்கும்.

மார்பு சளி தீர:

பொடுதலை,இஞ்சி,புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து துவையலாக செய்து சுடு உணவில் சாப்பிட்டு வரும் போது மார்பு சளி தீரும்.

ஆஸ்துமா குணமாக:

நொச்சி இழை,லவங்கம்,பூண்டு,மிளகு ஆகியவற்றை மென்று முழுகினால் ஆஸ்துமா முற்றிலும் குணமாகும்.

இருமல் குணமாக:

வெந்தியக்கீரையை சமைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் முற்றிலுமாக இருமல் குணமாகும்.

காசநோய் குணமாக:

ஆடாதொடை இழையை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர முற்றிலும் காசநோய் குணமாகும்.

ஜலதோஷம் குணமாக:

துளசி இழை,இஞ்சியை சம அளவு கலந்து கஷாயம் காயிச்சி குடித்து வர ஜலதோஷம் முற்றிலும் குணமாகும்.

வரட்டு இருமல் குணமாக:

மிளகுடன் பொரிக்கடலையை சேர்த்து பொடியாக்கி ஒவ்வொரு ஸ்பூன் என்ற கணக்கில் மூன்று வேலை உண்டு வர வரட்டு இருமல் நீங்கும்.

காய்ச்சல் குணமாக:

கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வர காய்ச்சல் முற்றிலும் குணமாகும்.மேலும் ஓமம்வல்லி இழையை காம்பு கஷாயம் செய்து குடித்து வரலாம்.முருங்கை பட்டையை அரைத்து ரசம் வைத்தும் சாப்பிட்டு வரலாம்.

இந்த கொரோனா காலக் கட்டத்தில் அதிக அளவு நோய் தொற்று பரவுவதால் உடலுக்கு அதிக அளவு எதிர்ப்பு சத்து தரும் பொருட்களை உணவில் சேர்த்து உண்ணலாம்.

Exit mobile version