Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாட்டி வைத்தியம்.. “மஞ்சள் + தேங்காய் எண்ணெய்” இருந்தால் ஒரே நாளில் தீராத மூட்டு வலிக்கு டாட்டா சொல்லி விடலாம்!!

#image_title

பாட்டி வைத்தியம்.. “மஞ்சள் + தேங்காய் எண்ணெய்” இருந்தால் ஒரே நாளில் தீராத மூட்டு வலிக்கு டாட்டா சொல்லி விடலாம்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பு மூட்டு வலி. இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம்.

ஆனால் நாம் சத்துக்கள் அற்ற உணவுகளை உண்டு வருவதால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் குறைவதோடு எலும்பு தேய்மானம், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனால் எளிதான வேலைகளை கூட செய்ய முடியாத சூழ்நிலைக்கு நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம்.

இதற்கு அதிக மருத்துவ குணம் கொண்ட மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:-

மஞ்சள் தூள்

தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் மற்றும் 1 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை மூட்டுகளின் மேல் பயன்படுத்துவதற்கு முன் வெந்நீரில் காட்டன் துணியை நினைத்து பிழிந்து மூட்டுகளின் மேல் வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்கவும்.

பின்னர் தயார் செய்து வைத்துள்ள மஞ்சள் + தேங்காய் எண்ணெய் பேஸ்டை மூட்டுகளின் மேல் தடவவும். இதை இரவில் பயன்படுத்துவதன் மூலம் மூட்டு வலி மற்றும் வீக்கம் சில தினங்களில் சரியாகி விடும்.

Exit mobile version