Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா?

#image_title

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா?

திராட்சை பழத்தில் இருந்து கிடைக்கும் திராட்சை விதைகளின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக திராட்சையில் பல வகைகள் இருக்கின்றது. வெள்ளை, கருப்பு, ஊதநிற திராட்சை என்று நிறைய வகைகள் இருக்கின்றது. இதில் கட்டைகள் அதாவது விதைகள் உள்ள திராட்சை மற்றும் விதைகள் இல்லாத திராட்சை என்று இருக்கின்றது.

இதில் வெறும் திராட்சையை மட்டும் சாப்பிடாமல் திராட்சையை அதன் விதையோடு சேர்த்து அதாவது கொட்டையோடு சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.

பொதுவாக திராட்சை பழம் ‘ஒயின்’ பானம் தயார் செய்ய பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் பிரான்ஸ் நாட்டில் திராட்சை பழம் ஒயின் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப் படுகின்றது. திராட்சை பழத்தை நாம் சாப்பிடுவதால் சருமம், முகம், தலைமுடி ஆகியவற்றிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.

அதே போல திராட்சைப் பழத்தின் விதைகள் அதாவது திராட்சை கொட்டையில் பல நன்மைகள் கிடைக்கின்றது. திராட்சை பழத்தை கவலையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

திராட்சை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

* வெறும் திராட்சை பழத்தை சாப்பிடுவதை விட திராட்சை பழத்தை விதையுடன் சாப்பிடும் பொழுது நம்முடைய உடலில் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

* திராட்சை பழத்தை விதையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ஆண்களுக்கு ஏற்படும் புராஸ்டேட் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

* திராட்சை பழத்தை விதையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

* திராட்சை விதைகளை சாப்பிடும் பொழுது வயிற்றின் மந்தநிலை சரியாகும். மேலும் நன்றாக பசி எடுக்கும்.

* குடல் பெண்களால் அவதிப்படுபவர்கள் மற்றும் வயிற்றுப் புண்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் திராட்சை படத்துடன் சேர்த்து விதைகளையும் சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் பொழுது புண்கள் ஆறிவிடும்.

* திராட்சை பழங்களை விதைகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது இரத்த நாளங்கள் விரிவடையும். மேலும் ரத்த சோகை நோய் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

* திராட்சை பழங்களை விதைகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது இதய நோய்கள் தொடர்பான பிரச்சனைகளும் குணமாகும்.

Exit mobile version