மூட்டு வீக்கத்தை குணப்படுத்திற்கு மருந்தாகும் திராட்சை சீட்ஸ்!! இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

0
125

திராட்சை பழம் அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய ஒரு பழவகை ஆகும்.இந்த பழத்தை விட அதில் இருக்கின்ற விதைகள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.தற்பொழுது கருப்பு திராட்சை விதைக்கு சந்தையில் அதிக மவுசு இருக்கின்றது.இதற்கு முக்கிய காரணம் புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தாக திராட்சை விதை பயன்படுகிறது.

கருப்பு திராட்சை விதையில் ப்ரோ அந்தோசயனிடின் என்ற வேதிப்பொருள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இது இரத்த குழாய் அடைப்பு,சர்க்கரை போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு திராட்சை விதை – 100 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

செய்முறை 01:

முதலில் கருப்பு திராட்சையில் இருந்து விதையை சேகரித்துக் கொள்ள வேண்டும்.100 கிராம் அளவிற்கு சேகரித்துக் கொண்டால் பொதுமானது.கருப்பு திராட்சை விதையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

செய்முறை 02:

கருப்பு திராட்சை விதையை வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.நன்றாக காய்ந்த பிறகு இந்த விதையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 03:

பிறகு இதை ஜல்லடை கொண்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த கருப்பு திராட்சை விதைப் பொடியை டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 04:

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் சிறிது சூடானதும் 15 கிராம் அளவிற்கு திராட்சை பொடியை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

செய்முறை 05:

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும்.இந்த திராட்சை விதை பானம் மூட்டு வலி,மூட்டு வீக்கம் மற்றும் உடலில் கேன்சர் செல்களுக்கு எதிராக போராட உதவுகிறது.

செய்முறை 06:

இந்த திராட்சை பானத்தில் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.இந்த பானத்தை 30 நாட்களுக்கு தொடர்ந்து பருகி வந்தால் மூட்டு வலி,முழங்கால் வலி முழுமையாக குணமாகும்.