மக்களே பெரும் ஆபத்து.. இந்த பாத்திரத்தில் சமைப்பதை தவிருங்கள்!! மருத்துவர் தரும் எச்சரிக்கை!!
உணவு சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களின் எந்த தீங்கும் விளைவிக்காதவையாக இரும்பு பாத்திரம் உள்ளது.உங்களில் பலருக்கு உணவு சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களில் முதல் சாய்ஸாக இருப்பது நான் ஸ்டிக் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் தான்.இதில் பல வகைகளில் பாத்திரங்கள் கிடைக்கிறது.
ஆனால் இந்த பாத்திரங்களில் சமைத்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது உடலுக்கு தீங்கு ஏற்படும்.கேன்சர் போன்ற உய்ரிக்கொல்லி நோய்கள் எளிதில் உடலில் ஏற்பட்டுவிடும்.எனவே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இரும்பு பாத்திரங்களை சமையலுக்கு உபயோகித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் இரும்பு பாத்திரத்தில் சமைத்த உணவை சாப்பிட்டு வரலாம்.நம் இநதியாவில் பெரும்பலான பெண்கள் இரத்த சோகை பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.இதனால் மருத்துவர்களே இரும்பினால் ஆன பாத்திரங்களில் சமைத்து உண்ணுங்கள் என்று அறிவுரை வழங்குகின்றனர்.
இரும்பு கடாயில் சமைக்கும் உணவுகள் அதிக ருசியாக இருக்கும்.இரும்பு பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு கருகிடாமல் ஒரே நேரத்தில் தயாரிகிறது.அது மட்டுமின்றி இந்த பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுகள் நீண்ட நேரம் சூடாக இருக்கும்.இரும்பு சத்து கிடைக்க,இரத்த சோகை நீங்க மருந்து,மாத்திரைகள் எடுப்பது போல் இரும்பு பாத்திரத்தில் சமைத்து உண்டால் இதுபோன்ற பாதிப்புகள் குணமாகும்.
ஆனால் இரும்பு பாத்திரத்தில் எலுமிச்சை,வாழைக்காய்,துவர்ப்பு நிறைந்த உணவுகளை சமைக்க கூடாது.அதேபோல் இரும்பு பாத்திரங்களை சோப் பயன்படுத்தி சுத்தம் செய்யக் கூடாது.வெது வெதுப்பான நீரை இரும்பு பாத்திரத்தில் ஊற்றி சில நிமிடங்களுக்கு ஊறவிட்டு பின்னர் சோப் பயன்படுத்தாமல் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.