இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 124 நாடுகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் இ விசா அல்லது விசா-ஆன்-ரைவல் வசதிகளுக்கு உட்பட்டு எளிதாக்கப்பட்ட விசா செயல்முறைகளின் மூலம் பயணிக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகி இந்தியர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இ விசா மூலம் பயணிக்கக் கூடிய 58 நாடுகள் :-
அல்பேனியா, அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, அர்ஜென்டினா, ஆர்மேனியா, ஆஸ்திரேலியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பெனின், போட்ஸ்வானா, புர்கினா பாசோ, கேமரூன், சிலி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யும் போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இ-விசா வசதியைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஜிபூட்டி, எகிப்து, எத்தியோப்பியா, காபோன், ஜார்ஜியா, கினியா, ஹாங்காங், இந்தோனேசியா, ஜப்பான், ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கிர்கிஸ்தான், லாவோஸ், மலாவி, மலேசியா, மால்டோவா, மங்கோலியா, மொராக்கோ, மொசாம்பிக், மியான்மர், நமீபியா, நியூசிலாந்து, ஓமன், பிலிப்பைன்ஸ், கினியா குடியரசு, ரஷ்யா, சாவோ டோம் மற்றும் பிரின்சிப், சிங்கப்பூர், தெற்கு சூடான், இலங்கை, சுரினாம், சிரியா, தைவான், தஜிகிஸ்தான், தான்சானியா, டோகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளுக்கும் செல்ல முடியும்.
விசா இல்லாமல் செல்லக்கூடிய 26 நாடுகள் :-
தாய்லாந்து, பூட்டான், நேபாளம், மொரிஷியஸ், மலேசியா, கென்யா, ஈரான், அங்கோலா, பார்படாஸ், டொமினிக்கா, எல் சால்வடார், பிஜி, காம்பியா, கிரெனடா, ஹைட்டி, ஜமைக்கா, கஜகஸ்தான், கிரிபதி, மக்காவ், மைக்ரோனேஷியா, பாலஸ்தீனியப் பகுதி, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செனகல், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் Tobago, Seychelles மற்றும் Serbia ஆகியவை இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் விசா இல்லாத பயணமாக இத அமையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.