சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் பயணிப்பர். எனவே இதற்காக ஒரு சிறப்பான முடிவை தமிழக போக்குவரத்து கழகம் எடுத்துள்ளது.
இதனை அடுத்து, இந்த ஆண்டு சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மோகன் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு சென்னையில், கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் என இரண்டு இடங்களில் இருந்து நவம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தமிழக போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் மோகனவர்கள் கூறுகையில், கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நாட்களையொட்டி, டிசம்பர் 26 முதல் 29-ஆம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகள் வெக்கப்படாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இவை மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை முறையில் தனி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மோகன் அவர்கள் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.