Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!!

#image_title

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!!

 

தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

இதில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் பூர்த்தி செய்ய உள்ளது.

இந்த முகாம் இன்று காலை பத்து மணியளவில் தொடங்கி மதியம் இரண்டு மணிவரை நடைபெற உள்ளது.

மேலும் இந்த முகாமிற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்களான, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் கார்டு, கல்வி தகுதிச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatcjobs.tn.gov.in  என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் கூடுதல் தகவல்களை அறிய வேண்டுமானால் 04175-233381 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து கேட்டு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version