உங்க வீட்டில் எப்பவுமே எறும்பு வராமல் இருக்க அருமையான டிப்ஸ்!! இதோ வாங்க பார்க்கலாம்!!
எறும்பு வீடுகளில் நிறைய தொல்லைகள் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும். எறும்புகள் எந்த காரணத்திற்காகவும் உங்கள் வீட்டிற்கு வரலாம். இதைத் தடுக்காமல் விட்டால், அது சகிக்க முடியாத அளவு பிரச்சினையாக மாறும்.
வீட்டில் உள்ள எறும்புகள் பொதுவாக பாதிப்பில்லாதவை, ஆனால் நீங்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் அவை எரிச்சல், தோலில் வீக்கம் அல்லது உங்கள் குறுநடை போடும் குழந்தையின் வாய் அல்லது மூக்கில் நுழையலாம். மேலும், விஷ எறும்புகளின் சாத்தியத்தை நீங்கள் நிச்சயமாக புறக்கணிக்கக்கூடாது
எறும்புகள் உள்ளே நுழையும் இடத்தில் எலுமிச்சை சாற்றை பிழியுங்கள் அல்லது எலுமிச்சைத் தோலை போட்டு வையுங்கள். மேலும் தரையை கழுவும் போதும் துடைக்கும் போதும் அந்த தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து கழுவலாம். எந்த ஒரு கசப்பான புளிப்பான பொருளும் எறும்புகளை விரட்டும். ஆனால் இனிப்பு பொருட்கள் எறும்புகளுக்கு நண்பன்.
புதினா இலைகளை எறும்புகள் வரும் இடத்தில் போட்டால் எறும்புகள் வராது. அந்த காலத்தில் எறும்புகள் வராமல் இருக்க வீட்டை சுற்றி புதினா செடிகளை வளர்ப்பார்கள். புதினாவை அரைத்து அதன் நீரையும் எறும்புகள் வரும் இடத்தில் ஸ்ப்ரே அடிக்கலாம்.
வீட்டிலுள்ள எறும்புகளை அகற்ற இந்த தகவலைப் பயன்படுத்தலாம். இலவங்கப்பட்டையை பொடி செய்து கொள்ளவும். எறும்புகள் அருகில் கூட வராத அளவுக்கு இலவங்கப்பட்டையின் மணம் இருக்கும். எறும்புகளைப் பிடிப்பதற்கு இலவங்கப்பட்டையின் வாசனையை இன்னும் வலுவாக மாற்ற, நீங்கள் சிறிது எசன்ஸ் எண்ணெயை ஊற்றலாம். பின்னர், உங்கள் வீட்டில் எறும்புகள் இருக்க விரும்பாத இடங்களில் இதைப் பயன்படுத்தவும்.
எறும்புகளுக்கு இனிப்பு பிடிக்கும் அளவிற்கு நேர்மாறாக காரம் பிடிக்காது. குறிப்பாக மிளகு இருந்தால், அந்த வாசனைக்கு எறும்புகள் வீட்டிற்குள் வராது. மிளகு எறும்புகளை கொல்லாது ஆனால் எறும்புகள் வீட்டிற்குள் நுழைவதை நிச்சயம் தடுக்கும். எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழையும் வழிகளில் மிளகை தூளாக்கி தூவி விடலாம். இது எறும்புகளை விரட்டி விடும். அல்லது எறும்புகள் நுழையும் இடங்களில், மிளகுத் தூளை தண்ணீரில் கலந்து பெப்பர் ஸ்ப்ரே ஆகவும் தெளித்து விடலாம். இந்த பயனுள்ள தகவல்கள் பயன்படுத்தி நன்மைகளை பெற்று மகிழுங்கள்.