பச்சை பயறு தோசை இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
85
#image_title

பச்சை பயறு தோசை இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவுகளில் தோசை முக்கிய இடத்தை வைக்கிறது.இதில் கேரட் தோசை,கார தோசை,கீரை தோசை என பல வகைகள் இருக்கின்றது.இதில் மிகவும் சத்தான பச்சை பயறு தோசை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவியான பொருட்கள்:-

*பச்சை பயறு – 1 கப்

*அரிசி – 2 டேபிள்ஸ் ஸ்பூன்

*சீரகம் – ஒரு துண்டு

*பச்சை மிளகாய் – 2

*பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்

*கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு

*உப்பு – தேவையான அளவு

*தண்ணீர் – 3 கப்

செய்முறை:-

1.முதலில் பச்சை பயறை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் அரிசி இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

2. குறைந்தது 8 மணி நேரம் இந்த பச்சை பயறு தண்ணீரில் ஊறி வேண்டும்.இதனால் முந்தைய நாள் இரவே நீங்கள் ஊற வைத்து விட்டால் மறுநாள் காலையில் அரைத்து மிகவும் சுலபமாக இருக்கும்.

3.மறுநாள் காலையில் அந்த தண்ணீரில் இருந்து அரிசியுடன் கூடிய பச்சைப் பயறை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதனுடன் இஞ்சி, 2 பச்சை மிளகாய், பொட்டுக் கடலை,சீரகம்,மல்லி தழை,தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

4.பிறகு அவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.

5.மாவிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மெல்லியதாக தோசை வார்த்தால் மொறு மொறுவென பச்சை பயறு தோசை தயராகி விடும்.