காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடனை முடித்துவிட வேண்டும்.மலக் குடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஆனால் இன்று பலர் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் அடக்கி வைத்தல்,குடற்புழு,செரிமானமாகாத உணவு உட்கொள்ளல் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.
சிலர் பல மாதங்களாக மலத்தை வெளியேற்ற முடியாமல் அவதியடைந்து வருவார்கள்.மலக் குடலில் இறுகி கிடக்கின்ற மலத்தை வெளியேற்ற மருந்து மாத்திரை பயன்படுத்துவது தற்காலிக நிவாரணம் மட்டுமே கொடுக்கும்.ஆனால் மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க,பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க நெல்லிக்காயை பயன்படுத்தி தீர்வு காணலாம்.
10 பெரு நெல்லிக்காயின் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இவ்வாறு செய்ய இயலாதவர்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பெரு நெல்லிக்காய் பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.
இப்பொழுது ஒரு கிளாஸ் எடுத்து முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை அதில் போட்டு கலந்து இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் இந்த நீரை வேறொரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் மலக் குடலில் தேங்கி இருந்த மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.
மலச்சிக்கலை போக்க மற்றொரு தீர்வு: ஒரு கிளாஸ் வெந்நீரில் சில துளி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.