Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த விதையை பொடித்து சூடான நீரில் கலந்து குடிக்க.. முழங்கால் வலி விட்டொழியும்!!

இளம் வயது நபர்கள் முழங்கால் வலி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.முதியவர்களைவிட இளம் வயதினருக்கு முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக குணமாக வெந்தய சூரணம் சாப்பிடுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெந்தயம் – 50 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் 50 கிராம் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு,மூன்று முறை அலசிக் கொள்ள வேண்டும்.

பிறகு வெந்தயத்தை நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.வெந்தய விதை நன்கு ஊறி வந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு காட்டன் துணியில் பரப்பி வெயிலில் இரண்டு நாட்களுக்கு காய வைக்க வேண்டும்.

பிறகு இவற்றை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வெந்தய சூரணத்தை காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வெந்தய சூரணம் சேர்த்து இனிப்பு சுவைக்காக தேன் கலந்து பருகலாம்.

இந்த வெந்தய சூரண பானத்தை தினமும் ஒரு கிளாஸ் அளவில் குடித்து வருபவர்களுக்கு முழங்கால் வலி பிரச்சனை அறவே ஏற்படாது.

வெந்தய சூரண பானம் பருகுவதால் கிடைக்கும் வேறு நன்மைகள்:

மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு நீங்கும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.எலும்பு வலிமை அதிகரிக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

வெந்தய சூரணத்தை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு அபாயம் ஏற்படும்.எனவே தினமும் ஒரு கிளாஸ் வெந்தய சூரணம் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வெந்தய சூரணம் எடுத்துக் கொள்ளும் முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

Exit mobile version