உடல் உஷ்ணத்தால் வரக் கூடிய கட்டிகள் மறைய இந்த இலையை அரைத்து மோரில் கலந்து குடியுங்கள்!!
கோடை வெப்பத்தால் உடலின் சூடு இயல்பை விட அதிகரித்து வருகிறது.ஏற்கனவே உடல் உஷ்ண பிரச்சனை இருபவர்களுக்கு இந்த கோடை காலத்தில் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக உடலில் சூடு கட்டி ஏற்பட்டு பெரும் தொந்தரவுகளை கொடுக்கும்.அது மட்டுமின்றி உடல் உஷ்ணத்தால் உடற் வறட்சி,கொப்பளங்கள்,தலைவலி,மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகிறது.
இந்த உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளுமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.இதற்கு மொத்தம் நான்கு பொருட்கள் தான் தேவைப்படும்.
1)பழம்பாசி இலை – ஒரு கைப்பிடி அளவு
2)சீரகம் – 1/4 தேக்கரண்டி
3)வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
4)மோர் – 1 டம்ளர்
பழம்பாசி இலை உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் கொண்டது.இதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் போட்டு நன்கு உலர்த்திக் கொள்ளவும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயத்தை தனி தனியாக ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இவை இரண்டும் கருகிட கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.பின்னர் ஒரு கிளாஸில் பிரஸ் மோர் ஊற்றி அரைத்த சீரகம் + வெந்தய பொடியை சேர்த்து கலக்கவும்.பின்னர் அரைத்த பழம்பாசி இலை பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கலக்கி குடிக்கவும்.
வெயில் காலம் முடியும் வரை இந்த பானத்தை குடித்து வந்தால் உடல் உஷ்ணம்,மஞ்சள் காமாலை,பித்தம் போன்ற நோய் பாதிப்புகள் உடலை அண்டாமல் இருக்கும்.