குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு

0
198
#image_title

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு

போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குகின்றனர் என டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த மாதம் 24 ஆம் தேதி மாலை குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவிலான இளைஞர்கள் தேர்வு பெற்றதாக தகவல்கள் வெளியாகின .

மேலும் தினமும் வெளியாகி வரும் பல வகையான தகவல்களால் குரூப் 4 தேர்வு விவகாரம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி எந்த விதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை . அதே நேரத்தில் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஒரு சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் சமூக வலைதளத்தில் ஒரு சில கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

போலி விளம்பரங்களை தேடும் பயிற்சி மையங்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், போட்டி தேர்வு பயிற்சி மையங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளால் டிஎன்பிஎஸ்சி பலிகடா ஆக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.