பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவு! பதற்றத்தில் திமுக!
காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழக மக்களிடையே வரவேற்பு கிடைத்து வருவதால் திமுகவினர் பதற்றம் அடைந்திருக்கிறார்கள். காசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொன்மையான ஆன்மீக கலாச்சார பிணைப்பை மீட்டெடுக்கவும், மக்களிடம் ஆன்மீக தேசிய உணர்வை வளர்க்கவும் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் டிசம்பர் இத் திட்டத்தின் 16ஆம் தேதி வரையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய பாஜக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், மாணவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், கிராம கோவில் பூசாரிகள் என்று தமிழகத்தைச் சார்ந்த 2592 பேர் பங்கேற்றனர். காசி தமிழ் சங்கமத்திற்காக சென்ற முதல் குழுவினர் காசி மட்டுமில்லாமல், உத்தரபிரதேசத்தில் இருக்கின்ற ஆன்மீக கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு பயணம் செய்து வருகின்றன.
காசி தமிழ் சங்கமம் ஆரம்ப விழாவில் தமிழர்களின் உடையான வேட்டி, சட்டை, துண்டு உள்ளிட்டவற்றை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றதும், தமிழகத்திற்கும், காசிக்கும் இருக்கின்ற தொடர்புகள் குறித்து பேசியதும் எல்லோரையும் கவர்ந்தது.
தமிழ் மடாதிபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காட்டிய நெருக்கமும் திமுகவை கலக்கமடைய செய்திருப்பதாக தெரிகிறது. தமிழ் சங்கமம் மூலமாக தமிழகத்தின் ஆன்மீக கலாச்சாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதாக எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.
இவ்வாறு காசி தமிழ் சங்கமத்திற்கு பெருகிவரும் வரவேற்பு திமுகவை பதட்டம் அடைய செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே திமுகவினரும், அந்த கட்சியின் ஆதரவாளர்களும் அதனை விமர்சனம் செய்து பேசியும், எழுதியும் வருகிறார்கள்.
தொலைக்காட்சியின் விவாதங்களில் பங்கேற்கும் திமுகவின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் காலூன்ற பாஜக செய்யும் தந்திரமே காசி தமிழ் சங்கமும் மத்திய அரசு நிதியில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலினை ஏன் அழைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
திமுக சார்பாக நடத்தும் ஊடகங்களில் காசி தமிழ் சங்கமத்தை விமர்சித்து நாள்தோறும் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. தொடக்க விழாவில் பங்கேற்ற இளையராஜாவையும் விமர்சித்து வருகிறார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு முன்னாள் செயலரும் எழுத்தாளருமான பி ஏ கிருஷ்ணன் திராவிட இயக்கத்தில் இருக்கும் சிலருக்கும் கலப்பட கம்யூனிஸ்டுகளுக்கும் காசி தமிழ் சங்கமும் எரிச்சலை கொடுத்திருக்கிறது. ஆனாலும் அது தமிழை பற்றி இந்தியா முழுவதும் பேச வைத்திருக்கிறது என்பதே உண்மை என தெரிவித்துள்ளார்.