தொடர்வண்டி டிக்கெட்டை ரத்து செய்தால் ஜிஎஸ்டியா? யாருக்கெல்லாம் வரி கிடையாது?

0
168

அண்மையில் நிதி அமைச்சகம் ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது அதில் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் பயண சீட்டுகள் ரத்து செய்வது சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது உறுதி செய்யப்பட்ட ரயில் பயண சீட்டுகளை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என திட்டமிட்டால் முன்பை விட நீங்கள் தற்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்திய ரயில்வே இயக்கி வரும் தொடர்வண்டிகள் மூலமாக வருடம் தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள்.

அதிலும் பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்கள் காரணமாக, தொடர்வண்டி பயணச்சீட்டுக்கான டிமான்ட் அதிகரித்திருக்கிறது.

ஆகவே தொடர்வண்டி பயணங்களின் போது தங்களுடைய பயணச்சீட்டை உறுதி செய்து கொள்வதற்காக பலர் தொடர் வண்டி பயண சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்கிறார்கள்.

ஆனாலும் திட்டமிட்டபடி ரயில் பயணங்களை மேற்கொள்ள இயலாமல் போகின்ற சூழ்நிலையில், முன்கூட்டியே பதிவு செய்து வைத்த பயண சீட்டுகளை கேன்சல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இந்திய தொடர்வண்டித் துறை டிக்கெட் கேன்சலேஷன் சார்ஜ் உள்ளிட்ட விதியை மாற்றியமைத்திருக்கிறது. இந்த மாத ஆரம்பத்தில் நிதியமைச்சகத்தின் டாக்ஸ் ரிசர்ச் யூனிட் வெளியிட்ட சுற்றறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட தொடர்வண்டி பயண சீட்டுகளை ரத்து செய்வது சரக்கு மற்றும் சேவை வரிக்குட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொடர்வண்டி பயண சீட்டுகள் ஒரு கான்ட்ராக்ட் என கருதப்படுகிறது. இதன் கீழ் சேவை வழங்கும் இந்திய தொடர் வண்டி துறை நுகர்வோருக்கு சேவைகளை வழங்க ஒப்புக்கொள்கிறது மற்றும் உறுதி வழங்குகிறது என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்த சுற்றறிக்கையினடிப்படையில், இந்த ஜிஎஸ்டி பிடித்தமானது முதல் வகுப்பு அல்லது ஏசி கோச்சில் பயணம் செய்யும் விதமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், செகண்ட் ஸ்லிப்பர் மற்றும் இருக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளுக்கு இந்த ஜிஎஸ்டி பிடித்தம் கிடையாது எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு அல்லது ஏசி கோச் பயணத்திற்கான பயணச் சீட்டுகளை கேன்சல் செய்யும்போது அதற்கான ட்ரான்ஸ்லேஷன் கட்டணம் ஐந்து சதவீத ஜிஎஸ்டிக்கு உட்பட்டது என கூறப்பட்டுள்ளது.

இதை தவிர தொடர்வண்டி பயணச்சீட்டு மட்டுமல்லாமல் விடுதி அல்லது விமான முன்பதிவுகளை கேன்சல் செய்ய வேண்டி இருந்தால் இதே கொள்கை பின்பற்றப்படும்.

இந்த சூழ்நிலையில், ரத்து கட்டணங்கள் பிரைமரி சர்வீசில் அதே ஜிஎஸ்டி விகிதத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்வண்டி புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏசி முதல் வகுப்பு அல்லது ஏசி எக்ஸிகியூட்டிவ் டிக்கெட்களை கேன்சல் செய்யும்போது கட்டணமாக 240 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.

தற்போதைய புதிய விதிமுறையின் காரணமாக, 240 ரூபாய்க்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டி இருக்கும். அதுவே ரயில் புறப்படும் 2 நாட்கள் முதல் 12 மணி நேரத்திற்குள் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் விலையில் 25 சதவீதம் கேன்சலேஷன் கட்டணமாக, விதிக்கப்படுகிறது.