எஸ்பிஐ ஏடிஎம் இருந்தால் போதும்…மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம் ! எப்படி தெரியுமா?

0
144

ஏடிஎம்-ல் பணம் எடுப்பது பற்றி நமக்கு தெரியும் ஆனால் ஏடிஎம் மூலம் மாதந்தோறும் பெரியளவில் வருமானத்தை ஈட்டுவது பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக ஏடிஎம் மையங்களை வங்கிகள் அமைத்திருக்கும் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைத்திருப்பார்கள் ஆனால் அது அப்படியில்லை. ஏடிஎம் மையங்கள் சில ஏஜென்சிகள் மூலமாக அமைக்கப்படுகிறது, அந்த ஏஜென்சியில் நாம் விண்ணப்பித்து ஏடிஎம் மையம் அமைக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளலாம். ஏடிஎம் மையம் அமைப்பதற்கான உரிமையை பெறுவது எப்படி? என்னென்ன தகுதிகள் வேண்டும்? எவ்வாளவு வருமானம் கிடைக்கும்? என்று இந்த பகுதியில் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

வங்கியின் ஏடிஎம் மையத்தை நிறுவ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(எஸ்பிஐ) ஆனது டாடா இண்டிகேஷ், முத்தூட் மற்றும் இந்தியா ஒன் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. ஏடிஎம் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவிரும்புபவர்கள் வங்கி ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதில் சில மோசடிகளும் நடக்கிறது என்பதால் விண்ணப்பிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏடிஎம் அமைக்க உங்களிடம் 50 முதல் 80 சதுர அடி இடம் இருக்க வேண்டும், அந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் தான் மற்ற ஏடிஎம்கள் இருக்க வேண்டும். மக்கள் எளிதாக கண்டறியும் வகையில் ஏடிஎம் அமைக்கப்பட வேண்டும், இங்கு தடையின்றி மின்சாரம் இருக்க வேண்டும் மற்றும் 1KW மின் இணைப்பும் அவசியம். ஏடிஎம் மையத்திற்கு கான்கிரீட் கூரை மற்றும் சிமென்ட் சுவர்கள் அவசியம் மற்றும் என்ஓசி வாங்க வேண்டும்.

மேலும் நீங்கள் இதற்காக ரூ.5 லட்சம் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனுக்கும் உங்களுக்கு ரூ.8 மற்றும் காசோலை மூலம் செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்களுக்கு வங்கி உங்களுக்கு ரூ.2ம் கொடுக்கும். ஏடிஎம் மையத்தை அமைப்பதன் மூலம் உங்களுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை வருமானம் கிடைக்கப்பெறும். இதற்கு ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மின்சார பில், வங்கி கணக்கு, பாஸ் புக், புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண், ஜிஎஸ்டி எண் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.