ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா! உண்பதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள்!!
“ஏழைகளின் ஆப்பிள்” என கொய்யாப்பழத்தினை அழைப்பார்கள். காரணம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. ஆப்பிளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்திற்கு நாம் அளிப்பதில்லை. கொய்யாப்பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையை இருக்கிறது.
கொய்யாவில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் இது கர்ப்பிணிகளுக்கும் கருவில் வளரும் கருவுக்கும் கண் குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது .மேலும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்த்து நரம்பியல் கோளாறுகளிலிருந்து குழந்தையை பாதுகாக்கிறது.
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையால் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொய்யாப்பழம் சிறந்த உணவாக இருக்கும். மேலும் கொய்யாவில் லைக்கோபீனே அதிகம் உள்ளதால் மார்பக புற்றுநோய் செல்களை இது அழித்து விடுகிறது.
இவ்வளவு நன்மைகள் உள்ள கொய்யாப்பழத்தில் சில தீமைகளும் உள்ளன அவற்றைப் பார்ப்போம்.
1. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.
2. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அதே போல் கொய்யாவை அளவுடன் சாப்பிட வேண்டும் .இல்லாவிடில் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.
3. கொய்யாப்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது தொண்டை வலிக்கு வழிவகுக்கும்.
4. உணவு சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட பின் அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன் கொய்யாப்பழத்தை சாப்பிட வேண்டும்.
5. கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிரக்டோஸ் உள்ளது.இதை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது வயிற்று வீக்கத்தை உண்டாக்கும்.
ஒரு நாளைக்கு ஒரு கொய்யா என்பது போதுமான ஒன்று.இரண்டு உணவு இடைவேளைக்கு இடையிலோ அல்லது உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் என எடுத்துக்கொண்டு வரலாம்.