கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு!

0
136

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:

  • தினமும் யோகாசனம், பிராணயாமா, தியானம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • வெந்நீர் அல்லது பாலில் ஒரு தேக்கரண்டி செவன்பிராஷ் கலந்து சாப்பிட வேண்டும்.
  • முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகள், சுவாச உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், வெந்நீர் குடித்தல் போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
  • மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
  • உடல் வெப்பநிலையை கண்காணித்தல், ரத்த அழுத்தம் பரிசோதித்தல், சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.
  • சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.