இந்தியா பாகிஸ்தான் எல்லை பதற்றம் பல வருடங்களாக நடந்து வரும் நிலையில், தற்பொழுது பாகிஸ்தான் அமைச்சகம் ஒரு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்யுள்ளது.அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அவ்வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் குஜராத் மாநிலத்தில் சில பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைத்ததனால், அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டாா். அந்த வரைபடத்துக்கு தனது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவா் கூறினாா்.
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை சர்ச்சைக்குரிய பிராந்தியம் என்றும்,ஒட்டுமொத்த காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பகுதியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளதாக வரைபடத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் இதேபோல் காரகோரம் கணவாய் வரை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு விரிவுபடுத்தப்பட்டு , சியாச்சினை பாகிஸ்தானின் பகுதி என வரைபடத்தில் காணப்படுகிறது.இந்த வரைபடத்தில் சீனாவும் காஷ்மீர் மற்றும் லடாக் எல்லை பகுதிகளை பாகிஸ்தான் வரைபடதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
குஜராத்திய மாநிலத்தில் உள்ள சா் கிரீக் ஆற்றின் மேற்கு கரையையொட்டி உள்ள சா்வதேச எல்லைக் கோடுகளை, கிழக்குக் கரையில் இருப்பது போலவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்லாமாபாதில் உள்ள முக்கிய சாலைக்கு ஸ்ரீநகா் என நெடுஞ்சாலை பெயரை மாற்றி பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்பு அந்த சாலை காஷ்மீா் நெடுஞ்சாலை என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு சொந்தமான ஜம்மு காஷ்மீர் லடாக் மற்றும் குஜராத் மாநிலத்தின் எல்லை போன்ற இந்திய பகுதிகளை பாகிஸ்தான் வரைபடம் மாற்றி அமைத்தது பெரும் சர்ச்சைக்குரியது எனவும், இது அரசியல் லாபத்தின் ஒரு பகுதியாகவும் என்றும், இதனை சட்டப்பூர்வமாக சந்திக்க இந்தியா முயன்று வரும் என கூறப்படுகிறது .
மேலும் இவ்வரைபடத்தை குறித்து குஜராத் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் பாகிஸ்தான் வரைபடம் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஆபத்தானது என்றும் பிரதமர் இம்ரான் கான் கலவரங்களுக்கு உருவாக காரணம் தொடர்பு இருக்காமல் இருக்கிறார் என்பதற்கு இந்த வரைபடம் சிறந்த உதாரணமாக இருப்பதாக கூறினார். இந்தியாவின் ஒற்றுமை பாட்டை அளிப்பதற்காக பாகிஸ்தான் முயற்சி எடுத்ததாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த ஓராண்டாக சர்வதேச நாடுகளின் பாகிஸ்தான் ஆதரவை பெறும் முயற்சியில் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தற்போது வரைபடத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.