Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குஜராத் மாணவி மதுரையில் வைத்து பலாத்காரம்! கைது செய்யப்பட்ட மாணவர் ஜாமீன் வழங்க கோரி மனு!!

குஜராத் மாணவி மதுரையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட மாணவர் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல்.

மாடவாக்கம் பகுதியை சேர்ந்த மாணவர் ஜெரோம் கதிரவன் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினந்தோறும் இரண்டு வேளை கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படித்து வந்துள்ளார் மதுரையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிச.,17, 18ல் மதுரையில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் குறித்த கருத்தரங்கு நடந்தது இதற்காக மதுரைக்கு வந்த மாணவி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள தங்குவிடுதியில் தங்கியுள்ளார்.

இதே விடுதியில் மாணவிக்கு அறிமுகமான சென்னை பெரம்பூரை சேர்ந்த அஷீஷ் ஜெயின் 22, காஞ்சிபுரம் மாடவாக்கம் ஜெரோம் கதிரவன் 22 ஆகிய இருவரும் தங்கியிருந்துள்ளனர்.

இரண்டு நண்பர்களும் மாணவியோடு பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். இது குறித்து மாணவி குஜராத் சென்ற பின்பு ஆன்லைனில் புகார் தெரிவித்திருந்தார். புகாரில் இரண்டு மாணவர்களையும் மதுரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் ஜெரோம் கதிரவன் தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தாரணி முன்பாக விசாரணைக்கு வந்தது:

விசாரணையின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் மாணவி ஏப்ரல் 23 ஆம் ஆண்டு இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். புகாரில் முகாந்திரம் இல்லை பொய்யான புகார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி மாணவன் ஜெரோம் கதிரவனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார். மேலும் மாணவர் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் காலை மாலை இருவேளை கையெழுத்து போட வேண்டும் என கூறினார்.

குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது நீதிமன்ற நிபந்தனைகளை மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாமென நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

Exit mobile version