Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈறு பேன் தொல்லை? ஒரே நாளில் நீங்க சிம்பிள் ஹோம் ரெமிடி இதோ!!

gum-lice-infestation-here-is-a-simple-home-remedy-for-you-in-one-day

gum-lice-infestation-here-is-a-simple-home-remedy-for-you-in-one-day

ஈறு பேன் தொல்லை? ஒரே நாளில் நீங்க சிம்பிள் ஹோம் ரெமிடி இதோ!!

கூந்தல் அழகைக் கெடுப்பது மட்டுமின்றி தலையில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி பாடாய்ப்படுத்தி வரும் பேன், ஈறு உள்ளிட்டவைகளின் தொல்லையால் பலர் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பேன் ஒரு புறஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தவை ஆகும்.

பேன் ஒருவர் தலைக்கு எவ்வாறு வருகிறது?

இந்த பேன் ஒருவரின் தலையில் இருந்து இன்னொருவருக்கு தலைக்கு எளிதில் பரவும் ஒட்டுண்ணி ஆகும். பள்ளி பருவங்களில் பலரும் இந்த பாதிப்பால் அவதிப்பட்டு இருப்போம். இந்த பேன், ஈறு குறைந்த நாட்களில் அசுர வளர்ச்சி அடைய காரணம் இரத்தம். தலையில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி வளரும் இவைகள் கூந்தலில் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

பேன், ஈறு தொல்லையால் தலைக்கு ஏற்படும் பாதிப்பு:-

ஒருவர் தலைக்கு பேன் வந்துவிட்டால் அவை ஊறும் பொழுதும், இரத்தத்தை உறிஞ்சும் பொழுதும் ஒரு வித அரிப்பு மற்றும் பொடுகு உள்ளிட்டவைகள் உருவாகத் தொடங்கும். இதனால் நமக்கு தேவை இல்லாத டென்ஷன் உருவாகும். இந்த தொல்லையில் இருந்து விடுபட இரசாயனம் கலந்த எண்ணெய், ஷாம்புகளை உபயோகித்து கூந்தலின் வளர்ச்சி மற்றும் அழகு நீங்க நாமே காரணமாகி விடுகிறோம். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது சிறந்த ஒன்றாக இருக்கும்.

பேன் தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*பூந்திக்கொட்டை – 100 கிராம்

*சீகைக்காய் – 20 கிராம்

*உலர்த்திய பெரு நெல்லிக்காய் – 20 கிராம்

செய்முறை:-

முதலில் 20 கிராம் அதாவது 3 முதல் 4 பெரு நெல்லிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் காயவைக்கவும். அவை உலர்த்தி வந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து 100 கிராம் அளவு பூந்திக் கொட்டை மற்றும் 20 கிராம் அளவு சீகைக்காய் எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அடுத்து விதை நீக்கி வைத்துள்ள பூந்திக் கொட்டை மற்றும் சீகைக்காய் எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் உலர்த்தி வைத்துள்ள பெரு நெல்லிக்காயை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அனைத்து அதை நன்கு ஆறவிடவும்.

பின்னர் ஆற வைத்துள்ள தண்ணீரில் இருக்கும் பொருட்களை பிழிந்து வெளியேற்றவும். இவ்வாறு செய்வதன் மூலம் தண்ணீர் நுரைத்து ஷாம்பு போல் வரும். இந்த ஷாம்புவை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

இந்த ஷாம்புவை பயன்படுத்துவதற்கு முன் தலைக்கு எண்ணெய் வைத்துக் நன்கு மஜாஜ் செய்து கொள்ளவும். பின்னர் இந்த பூந்திக் கொட்டை ஷாம்புவை தலைக்கு உபயோகித்து சில நிமிடங்கள் தலையை ஊற விடவும். பின்னர் கூந்தலை தண்ணீர் கொண்டு அலசிக் கொள்ளவும்.
இவ்வாறு செய்து வந்தோம் என்றால் தலையில் நம் இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்த ஈறு, பேன் உள்ளிட்டவை அடியோடு ஒழிந்துவிடும்.

பேன் தொல்லை நீங்க நாம் பயன்படுத்திய பொருட்களில் பூந்திக்கொட்டை குளிர்ச்சி நிறைந்த பொருளாக இருக்கிறது. இவை இயற்கையாகவே நுரைக்கும் தன்மை கொண்டிருக்கிறது. இதனால் கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பு கிடைத்து விடுகிறது. அதேபோல் நெல்லிக்காய் தலை முடிகளுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக இருக்கிறது. சீகைக்காய் தலையில் அரிப்பு பொடுகு உள்ளிட்ட பிரச்சனை உருவாகாமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

Exit mobile version