Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமண தடை நீக்கும் வியாழக்கிழமை விரதம்!

வியாழக்கிழமை என்று சொன்னாலே அது குருபகவானுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் சுக்லபட்சம் என்று சொல்லப்படும் வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை முன்னெடுக்கலாம் ஏற்படுத்தும்.

பிரகஸ்பதி என்று சொல்லக்கூடிய வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் அன்றைய தினத்தில் காலை எழுந்தவுடன் தலைக்கு குளித்து, மஞ்சள் நிற ஆடையை அணிந்து எதையும் சாப்பிடாமல் அருகிலிருக்கின்ற நவக்கிரக கோவிலுக்கு சென்று குரு பகவானை வழிபட வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள் நிறப்பூக்கள் சாற்றி மஞ்சள் நிற இனிப்புகளை வைத்து நைவேத்தியம் செய்து சந்தனம், மஞ்சள், உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

அதாவது, மஞ்சள் நிறத்திலேயே அனைத்தும் பயன்படுத்தி நடைபெறுவதற்கான அறிகுறி இது அதன் பிறகு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குருபகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் நன்று.

முக்கியமாக இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அன்றைய தினத்தில் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது. அதோடு அன்றைய நாள் முழுவதும் குருபகவான் தொடர்பான மந்திரங்களை தெரிவித்து பகவானை வழிபடுவது மிகவும் நன்று.

அதேபோல அன்றைய தினத்தில் மாலை சமயத்தில் ஆடைகள், இனிப்புகள்m என்று அடுத்தவர்களுக்கு தானம் செய்யலாம் தானம் செய்து முடித்த பின்னர் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.இவர்களுக்கு குருபகவான் அனுக்ரஹம் என்றென்றும் இருக்கும் என்பது ஐதீகம்

அதிலும் குறிப்பாக திருமணத் தடை நீங்கும். ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகதோஷம் ஏதுவாகயிருந்தாலும் கழிந்துவிடும் தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் இதுபோன்ற பல நன்மைகளை குருபகவான் விரதம் மூலமாக பெற முடியும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

Exit mobile version