குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மேஷம்
மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 ல் வக்கிரம் அடைகிறார். மீண்டும் 18 – 10 2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்அதேபோல் கடந்த 23-5-2021 ல் மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான், 11-10-2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.அந்த வகையில், மேஷ ராசியை பொறுத்தவரை, குரு பகவான் அதிசாரமாக கும்பத்திற்கு சென்று, தற்போது வக்கிரம் அடைந்துள்ளார்.
கோச்சார ரீதியாக பதினோராம் இடத்தில் இருக்கும் குரு பகவான், சுப பலன்களை வழங்குவார் என்பது பொதுவான விதி.ஆனால், மேஷ ராசிக்கு, பதினோராம் இடமான கும்பம் பாதக ராசியாகும். எனவே, பதினோராம் இடத்தில் இருந்தாலும், பாதக ராசியில் இருக்கும் குரு பகவானால், சுப பலன்களை வழங்க முடியாது என்பதே உண்மை.
ஆனால், பதினோராம் இடத்தில் வக்கிரம் அடையும் குரு பகவான், நிச்சயம் நல்ல பலன்களை வழங்குவர். எனவே, குரு பகவான் மீண்டும் மகரத்திற்கு செல்வதற்கு முன், மேஷ ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக சில நன்மைகளை கட்டாயம் வழங்குவார்.
அதனால், இதுவரை தொழில் ஏற்பட்டிருந்த மந்த நிலை மாறி, ஓரளவு நல்ல மாற்றம் ஏற்படும். மூத்த சகோதர சகோதரி வழியில் இருந்த பிணக்குகள் முடிவுக்கு வரும். அவர்களால், உதவிகளும் கிடைக்கும்.மேஷத்திற்கு மூன்றாம் இடமான, மிதுனத்தை பார்வை செய்யும் குரு பகவான், இதுவரை முடங்கி இருந்த முயற்சிகளை செயல்படுத்த வழி வகுப்பார்.
தடைபட்ட சிறு பயணங்கள் மீண்டும், நல்ல படியாக அமையும். முடிவுக்கு வராத ஒப்பந்தங்கள் நல்ல முறையில் முடியும். கடிதங்கள், தொலைபேசிகள் மற்றும் இ-மெயில் மூலம் அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.
குரு, ஏழாம் பார்வையாக சிம்மத்தை பார்வை செய்வதால், இதுவரை மந்தமாக இருந்த குழந்தைகளின் கல்வி, இனி திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால், மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும்.தடைபட்ட காதல் மீண்டும் அரும்பும். எதிர்பாராத தன லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பங்கு சந்தை நல்ல லாபத்தை தரும்.
அதேபோல், குரு தனது ஒன்பதாம் பார்வையால், ஏழாம் இடத்தை பார்வை செய்கிறார். அதனால், இதுவரை தடைபட்ட திருமணங்கள் இனி நல்ல முறையில் நடைபெறும்.சிலருக்கு காதல் திருமணம் கைகூடும். தொழில் பங்குதாரர்களுடன் இணக்கமான போக்கு தொடங்கும். தொழில் மேம்பாட்டுக்காக சில பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
குரு பகவானின் வக்ர பலன்களை போல, வக்கிர சனியின் பலனையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.அதன்படி, மேஷ ராசிக்கு பத்து மற்றும் பதினொன்றாம் இடத்திற்கு உரிய சனி பகவான், தற்போது, பத்தாம் இடமான மகரத்தில் வக்கிரம் அடைந்துள்ளார்.
அதனால், சுமூகமாக இயங்கிய தொழில்களில் லேசான சுணக்கம் தென்படும். எனினும் இது தற்காலிகமான சுனக்கமே. விரைவில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.அதேசமயம், தொழில் ரீதியாக இதுவரை இருந்த இடையூறுகள் மற்றும் தடைகள் விலகும். இதுவரை மற்றவர்கள் அனுபவித்த உங்கள் உழைப்பின் பலனை, இனி நீங்களே நேரடியாக அனுபவிப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
உங்களால் பலருக்கு வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் அமையும். அதன் மூலம் உங்கள் மதிப்பு மற்றும் அந்தஸ்து உயரும்.சிலர் இதுவரை வகித்து வந்த பொறுப்புக்களில் இருந்து விலக நேரும். சிலர் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும்.
தொழிலில் சில தற்காலிக நெருக்கடிகள் வந்து மறையும். அதே போல், எதிர்பாராத திடீர் வருவாய் வாய்ப்புகளும் கிடைக்கும்.தொழில் நெருக்கடி, பண நெருக்கடி போன்ற மன உளைச்சலால், வேளா வேளைக்கு, உண்ண முடியாமலும், உறங்க முடியாமலும் தவித்தவர்கள், இனி நிமதியாக உண்டு உறங்க முடியும்.
தடை பட்ட வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் விரைவில் கைகூடும். சிலர், தவிர்க்க முடியாத காரணங்களால், தங்கள் பயணத்தை தள்ளி வைக்க நேரும்.வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை பழுது பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். அதனால், சிறு சிறு செலவுகள் ஏற்படும். அவற்றை உடனுக்குடன் செய்வதன் மூலம், பெரிய நெருக்கடிகளை தவிர்க்கலாம்.
வக்கிர சனியின் பத்தாம் துலாம் ராசி மீது விழுவதால், கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்த மனக்கசப்பு அகலும். அதேபோல், தொழில் பங்குதாரர்களுடன் இருந்த விரிசல் முடிவுக்கு வரும்.இரண்டாம் இடத்தில் இருக்கும் ராகு, வீட்டை பிரம்மாண்டமாக மாற்றி அமைக்கும் எண்ணத்தை தூண்டிக்கொண்டே இருப்பார். சில விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கைக்கும் வழிவகுப்பார்.
மாற்று மொழி மற்றும் மாற்று இனத்தவரால், வருவாய் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனினும், பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு பெரிய அளவில் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.எட்டாம் இடத்தில் இருக்கும் கேது, அவ்வப்போது வயிற்றில் சில சிக்கல்களை ஏற்படுத்துவார். அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவில் கவனம் தேவை.
மொத்தத்தில் வக்கிர குரு மற்றும் வக்கிர சனி, மேஷ ராசிக்கு, சாதக, பாதக பலன்களை கலந்தே தருவார்கள்.பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம், கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.
ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை.எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.
மற்ற ராசிகள்:
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மேஷம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 ரிஷபம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மிதுனம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கடகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 சிம்மம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கன்னி
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 துலாம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 விருச்சிகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 தனுசு
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மகரம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கும்பம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மீனம்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் முழு பலன்களை காண கீழுள்ள வீடியோ பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=ZdJlicZmZn4