குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 ரிஷபம்
மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 ல் வக்கிரம் ஆகி, 18 – 10 2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
அதேபோல் கடந்த 23-5-2021 ல் மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான், 11-10-2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.
அந்த வகையில், ரிஷப ராசிக்கு பத்தாம் இடமான கும்பத்திற்கு, குரு அதி சாரமாக சென்று, வக்கிரம் அடைந்துள்ளார்.
பத்தாம் இடம் என்பது குரு பகவானுக்கு உகந்த இடம் அல்ல. பத்தாம் இடத்து குரு, பதவியை பறிக்கும் அல்லது பதவியை மாற்றும்.
ஆனால், பத்தாம் இடத்தில் குரு வக்கிரம் ஆகும்போது, அதன் நெகடிவ் தன்மை குறைந்து பாசிடிவ் பலன்கள் அதிகரிக்கும்.
அதனால், வேலை இல்லாதவர்களுக்கு புதிதாக வேலைகள் கிடைக்கும். அதேபோல், தொழிலில் நெருக்கடி இருந்தால், அந்த நெருக்கடிகள் அனைத்தும் விலகத் தொடங்கும்.
பத்தாம் இடத்து குரு நல்ல பலன்களை வழங்கவில்லை என்றாலும், அங்கு வக்கிர நிலையில் இருக்கும் குரு, நிச்சயம் நல்ல பலன்களை வழங்குவார்.
ரிஷபத்திற்கு எட்டாம் அதிபதியான குரு, பத்தாம் இடத்தில் அமருவதால், தொழில் ரீதியான எதிர்ப்புகள் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வக்கிரம் அடைந்துள்ளதால், பலன்கள் மாறி மாறி நடக்கத் தொடங்கும்.
கும்பத்தில் உள்ள குரு, ஐந்தாம் பார்வையாக மிதுனத்தை பார்வை செய்வதால், இதுவரை தடைபட்டு இருந்த வருமானம் கொஞ்சம், கொஞ்சமாக வரத்தொடங்கும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். விருந்தினர்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளால் மனம் நிறைவடையும். பொன், பொருள், சேர்க்கையும் ஏற்படும்.
அதேபோல், ரிஷபத்திற்கு நான்காம் இடமான சிம்மத்தை, குரு பார்வை செய்வதால், இதுவரை வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சி தடை பட்டிருந்தால், இப்போது நிறைவேறும்.
அதேபோல், தொடர்ந்து தடங்கல் ஆகிக்கொண்டே இருந்த, புதிய வீடு மற்றும் வீடு மாற்றம் போன்ற முயற்சிகள் இனி நிறைவேறும்.
தாயார் மீது அல்லது தாயாருக்கு நிகரானவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது ஆசிர்வாதத்தையும் பெற வேண்டும். அவர்களிடம் பெறும் ஆசீர்வாதம், உங்கள் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும்.
குருவின் ஒன்பதாம் பார்வை, ஆறாம் இடமான துலாம் ராசியில் விழுவதால், இதுவரை கட்டுக்கு அடங்காத பணியாளர்கள், இனி உங்கள் மனம் அறிந்து நடந்து கொள்வார்கள்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சில வழக்குகள் முடிவுக்கு வர வாய்ப்புகள் ஏற்படும். வங்கி மற்றும் பிற இடங்களில் இருந்து எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.
வக்கிர குரு தரும் பலன்களை போல, வக்கிர சனியின் பலன்களையும் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.
அதன்படி, ரிஷப ராசிக்கு ஒன்பது மற்றும் பத்துக்கு அதிபதியான சனி, தற்போது ஒன்பதாம் இடமான மகரத்தில் வக்கிரம் அடைந்துள்ளார்.
அதனால், ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானவர்கள், சற்று ரிலாக்ஸ் ஆக வாய்ப்புகள் உருவாகும்.
பத்தாம் இடத்தில் குரு, ஒன்பதாம் இடத்தில் சனி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் வக்கிரம் அடைவதால், பணம், மற்றும் தொழில் நெருக்கடிக்கு ஆளானவர்கள் அதில் இருந்து மீண்டு வர வாய்ப்புகள் உருவாகும்.
புதிதாக தொடங்கிய தொழில்களில் அல்லது புதிதாக சேர்ந்த பணிகளில் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டாலும், அது தற்காலிகமான நெருக்கடியே, அதனால், பொறுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், நெருக்கடி நிலை விரைவில் மாற்றத்துக்கு உள்ளாகும்.
சனியின் மூன்றாம் பார்வை, ராசிக்கு பதினோராம் இடத்தில் விழுவதால், தொழிலில் இதுவரை லாபம் பார்க்காதவர்கள், இனி லாபம் பார்ப்பார்கள். மூத்த சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட மனவருத்தம் முடிவுக்கு வரும்.
மனையில் போர்வெல் அமைக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். நீரின் வரத்து குறைவாக இருந்தால், அது அதிகமாகும்.
சனியின் பார்வை ராசிக்கு மூன்றாம் இடத்தில் விழுவதால், இதுவரை தடைபட்ட முயற்சிகள் இனி வெற்றிகரமாக நடைபெறும். தடைபட்ட பயணங்கள் மீண்டும் தொடரும். தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட இடையூறுகள் களையப்படும்.
ஜென்மத்தில் இருக்கும் ராகு, மனதுக்குள் பல்வேறு கற்பனை கோட்டைகளை கட்டி எழுப்பிக்கொண்டே இருப்பார். உழைப்பை விட அதிர்ஷ்டத்தை பற்றிய சிந்தனைகளையே அதிகம் கொடுப்பார். இன்றைய கனவுகள் அனைத்தும், பிற்கால வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதே சமயம் ஏழாம் இடத்தில் இருக்கும் கேது, மனைவி மற்றும் தொழில் பங்குதாரர்கள் விஷயத்தில் இணக்கமான உறவை தர மாட்டார். அதேபோல், திட்டமிட்ட பயணங்கள் பலவற்றுக்கும் தடையை ஏற்படுத்துவார். பொது வாழ்க்கையில் மன நிறைவை தரமாட்டார்.
இதுவரை சாதகமான பலன்களை அனுபவித்து வந்தால், அந்த பலன்கள் சனி மற்றும் குருவின் வக்கிர காலத்தில் தடைபடும். அப்படி இல்லை என்றால், நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம், கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.
ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை.
எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.
மற்ற ராசிகள்:
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மேஷம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மிதுனம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கடகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 சிம்மம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கன்னி
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 துலாம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 விருச்சிகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 தனுசு
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மகரம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கும்பம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மீனம்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் முழு பலன்களை காண கீழுள்ள வீடியோ பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=ZdJlicZmZn4