Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

GV Prakash Chaindavi to reunite!! Fans rejoice!!

GV Prakash Chaindavi to reunite!! Fans rejoice!!

cinema:திரை துறையில் விவாகரத்து பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய இடியாக உள்ளது. இந்த விவாகரத்து வரிசையில் தனுஷ்-ஐஸ்வர்யா, ஜெயம் ரவி- ஆர்த்தி, ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா பானு, டி.இமான்-மோனிகா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஆகியோர். இதில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தார்கள். பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2020-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தையின் பெயர் அவ்னி. சைந்தவி ஒரு பாடகி மற்றும் ஜீ.வி.பிராக்ஸ் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகராக திரையுலகில் வலம் வருகிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அவர்கள் மீண்டும் இணையப் போவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இசை.

டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி மலேசியா தலைநகரை கொண்ட கோலாம்பூரில் செலிப்ரேஷன் ஆஃப் லைஃப் என்ற பெயரில் ஜி.வி. பிரகாஷ்-ன்  இசை கச்சேரி நடக்கிறது. இந்த இசை கச்சேரியில் அவரது விவாகரத்து பெற்ற மனைவி சைந்தவி பாடப் போகிறார். இந்த தகவலை சைந்தவியே, ஜி.வி.பிராக்ஸ் சாரின் இசை நிகழ்ச்சியில் பாட போகிறான் என தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கிடையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இசைக்காக அவர்கள் மீண்டும் ஒன்றாக சேரப்போகிறர்கள். இந்த செய்தியால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Exit mobile version