Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெயில் படத்தின் அடுத்த பாடல்? அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!!!

ஜிவி பிரகாஷ்.2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அதன்பின் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.தற்பொழுது விரைவில் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “ஜெயில்”.

இந்தப்படத்தில் வசந்தபாலன் உடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். ஜெயில் படத்தில் ஜிவி உடன் அபர்நதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த மாதம், இப்படத்திலிருந்து வெளியான ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது . பாடலாசிரியர் கபிலன். இசையமைப்பாளர் ஜிவி இசையில் தனுஷ் மற்றும் அதிதி ராவ் இணைந்து இப்பாடலைப் பாடியிருந்தனர்.

தற்போது ஜெயில் படத்தின் அடுத்த பாடல் பற்றிய அறிவிப்பைத் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் ஜிவி. இந்தப்பாடல் நண்பர்களைப் பற்றிய பாடல் என்றும், இந்தப் பாடலை மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ பாடலை எழுதிப் பாடியிருந்த அறிவு, இந்தப் பாடலையும் எழுதி உள்ளார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.இந்த பாடலை எழுதிய  அறிவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். 

நட்பு பற்றிய பாடல் என்றதால். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.ஜிவியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவரின் ரசிகர்கள் அடுத்த பாடலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

 

Exit mobile version