Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை!

John geddert

John geddert

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகானத்தில் உள்ள லான்சிங் நகரில் டிவிஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப் என்ற பயிற்சி நிலையத்தை வைத்திருந்தவர் ஜான் கெடர்ட். இவர், அமெரிக்காவின் பெண்கள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 63 வயதான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கெடர்ட் மீது அடுக்கடுக்கான பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்தவர், அவரது பயிற்சி நிலையத்தில் மருத்துவராக இருந்த லாரி நாசர். இவர், பயிற்சி வந்த சிறுமிகள் உள்ளிட்ட பெண்களுக்கு தவறான மருத்துவச் சான்று கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் குற்றவாளியாக 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 175 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவராவார்.

நாசர் தண்டிக்கப்பட்டவுடன், அவர் செய்த குற்றங்கள் குறித்து தனக்கு எதுவும் தனக்கு தெரியாது எனக்கூறி ஜிம்னாஸ்டிக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக கெடர்ட் அறிவித்துள்ளார். இந்நிலையில், பயிற்சிக்கு வந்த 13 முதல் 16 வயதுடைய சிறுமிகளை பணத்திற்காக கடத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது என அடுக்கடுக்கான புகார்களை கெடர்ட் மீது நாசர் தெரிவித்துள்ளார்.

நாசர் குற்றம் சாட்டிய அடுத்த சில மணி நேரத்தில் கெடர்ட் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version