குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரை செய்யும் H/L 1 சுகாதார நிபுணர்கள்!

0
132
H / L 1 health experts recommend vaccinating children!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரை செய்யும் H/L 1 சுகாதார நிபுணர்கள்!

கொரோனா பரவலின் காரணமாக தற்போது கடந்த வருடத்தில் இருந்தே பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் பயிலும் வண்ணம் அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் அரசு மும்முரமாக செயல்படுகிறது. முதலில் வயதானோருக்கும், இணை நோய்கள் உள்ளோருக்கும், தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், தற்போது 18 வயதை நிறைவடைந்தவர்களும் தடுப்பூசி போடலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனாவின் மூன்றாம் அலையின் பாதிப்பு குழந்தைகளை அதிக அளவு தாக்கும் என அஞ்சுவதால், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம் என எண்ணுகின்றனர்.

அனைத்து குழந்தைகளுக்கும் இன்ஃப்ளுயன்ஷா வேக்சினேஷன்  போட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறியதாக செய்திகள் வரும் நிலையில், காய்ச்சல் அல்லது சளி மற்றும் கோவிட் 19 ன் அறிகுறிகள் ஒன்றுபோல் உள்ளதால், நிபுணர்கள்  ஃப்ளு வேக்சினேஷனை போடுவதன் மூலம் அது  குழந்தைகளை பாதுகாத்து பெற்றோர்களுக்கு பதற்றத்தை குறைக்கும் என பெரிதும் நம்புகிறார்கள்.

பல பெற்றோர்களுக்கு ஃப்ளு அல்லது இன்ஃப்ளுயன்ஷா என்றால் என்னவென்று தெரியாத நிலைதான் உள்ளது. இது சாதாரண சளியை விட எவ்வாறு வேறுபடும்?  மேலும் இதில் இருந்து நாம் நம் குழந்தைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

அந்த நோய் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.

மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் நமது குழந்தைகளுக்கு வந்தால் எவ்வாறு சமாளிப்பது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. இருப்பினும் காய்ச்சல், மூக்கு அடைப்பு மற்றும் மற்ற சளி சம்மந்தப்பட்ட அறிகுறிகள் இருந்தால், குழந்தைகள் இன்ஃப்ளுயன்ஷா என்னும் அபாய கட்டத்திற்குள் வருவார்கள், இதனை  ஃப்ளு என்றும் கூறலாம்.

இந்த ப்ளூ குழந்தைகளை தாக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் சரி ஆனாலும் மற்றவர்களையும் தாக்கும் என்றும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களையும் இது தாக்குகிறது எனவும், இந்த ப்ளூவானது தக்குவதினால் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 1 இலட்சம் குழந்தைகள் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுகின்றனர் என்று ஒரு ஆய்வின் மூலம் கண்டறியப்படுகிறது.

ஒரு சில ஆன்டி வைரல் (ஆன்டி இன்ப்ளூயன்சா) மருந்துகள் இருக்கின்றன இது நோயை குணப்படுத்தும், இருப்பினும், நோய் வராமல் தடுப்பது மிக முக்கியம். எளிமையான மற்றும் சிறப்பான பாதுகாப்பு முறைகள் கிருமியை பரப்பாமல் தடுக்கும். இதில் உள்ள பாதுகாப்பு முறைகள்:

  1. குழந்தைகளுக்கு இரும்பும் போதும் தும்மும் போதும் வாயை மூட கற்றுக் கொடுப்பது.
  1. கைகளை அடிக்கடி மற்றும் நன்கு கழுவுவது. தண்ணீர் இல்லாத தருணங்களில், சானிடைசேர் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.
  1. தொற்று ஏற்பட்டவர்களுடன் சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் நேரடி தொடர்பை தவிர்த்தல்.
  1. குறிப்பாக பொது இடங்களில் முக கவசம் அணிதல்.
  1. ஆண்டிற்கு ஒருமுறை இன்ஃப்ளுயன்ஷா வேக்சினேஷன்.

வருடாந்திர ஃப்ளு வேக்சினேஷன் நம்மை இன்ஃப்ளுயன்ஷா நோயிலிருந்து பாதுகாக்க ஒரு சிறந்த வழியாக உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: பொது நலம் கருதி வெளியிடுவோர் GlaxoSmithKline Pharmaceuticals Limited. Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030, India. இந்த பதிவில் கூறிய அனைத்து தகவல்களும் பொது விழிப்புணர்வே. இதில் எதுவும் மருத்துவ பரிந்துரை இல்லை. இது தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு உங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். உங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் முழு நோய்கள் தடுப்பு தடுப்பூசி அட்டவணை பெற அணுகுங்கள். GSK பொருட்களுடன் ஏதேனும் புகார் இருந்தால் இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும் [email protected].

CL code: NP-IN-FLT-OGM-210007, DoP Jun 2021

  1. https://www.hopkinsmedicine.org/health/conditions-and-diseases/influenza/influenza-flu-in-children
  2. D Purakayastha et al, Journal of Tropical Pediatrics, 2018, 64, 441–453
  3. https://www.cdc.gov/flu/about/keyfacts.htm https://www.seruminstitute.com/health_faq_influenza.php#
  4. https://www.cdc.gov/flu/about/disease/spread.htm
  5. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7462404/#:~:text=Large%20respiratory%20droplets%20containing%20pathogens,sneezes%20(23%E2%80%9325)
  6. https://www.cdc.gov/flu/prevent/actions-prevent-flu.htm