நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எச் ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
அதாவது நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் அடைந்ததற்கு இயற்கை காரணம் அல்ல, அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்த எச் ராஜா, அவருடைய மரணத்திற்கு காரணம் அப்போது பாபநாசம் சட்டசபை உறுப்பினராக இருந்த ஜவாஹிருல்லாஹ் என்று தெரிவித்தார்.
இதன் காரணமாக, திருமாவளவன் உள்ளிட்டோர் அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் அதோடு இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து தான் பேசிய சர்ச்சை கருத்துக்கு எச் ராஜா மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதோடு தவறான நோக்கத்துடன் நான் அவ்வாறு பேசவில்லை என்று தெரிவித்து இருக்கிறார் எச் ராஜா.
அதேசமயம் ராஜாவிற்கு இவ்வாறு இஸ்லாமிய அமைப்புகளைப் பற்றியும், இஸ்லாமிய தலைவர்களை பற்றியும் தவறாக பேசி விட்டு மன்னிப்பு கேட்பது வாடிக்கையாகிப் போய்விட்டது. அதனால் இந்த முறை அவர் மன்னிப்பு கேட்டாலும் நாங்கள் அவரை மன்னிக்க மாட்டோம் என்று பல இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.