ஏற்கனவே பாஜகவை சார்ந்த கல்யாணராமன் கைது செய்யப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது அதே கட்சியை சார்ந்தவரும் முன்னாள் தேசிய செயலாளருமான எச் ராஜா மிக விரைவில் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது என்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி உறுதியாக கூறியிருக்கிறார். இது பாஜகவினர் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதோடு ஏற்கனவே பாஜகவை சார்ந்த கல்யாணராமன் கைது செய்த விவகாரத்தில் திமுக மீது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான கோபத்தில் இருக்கிறார். இந்த சமயத்தில் அமைச்சர் ரகுபதி இவ்வாறு ஒரு தகவலை தெரிவித்து இருப்பது மேலும் அவரை கொதிப்படைய செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக உரையாற்றிய அமைச்சர் ரகுபதி பத்து வருட காலமாக சிறையில் இருப்பவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகின்றது, மிக விரைவில் தகுதியான நபர்களை விடுதலை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறது. தமிழக முதலமைச்சர் 7 பேர் விடுதலையில் அக்கறை கொண்டு முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ரகுபதி.
திறந்த வெளி சிறைச்சாலைகளில் அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் எண்ணமாக இருக்கிறது, அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் மத்திய சிறைச்சாலை மாற்றப்படும் என்றால் இந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.
புதிய சிறைச்சாலை அமைந்திட இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது, செம்மொழி பூங்கா அமைப்பதற்காக இந்த இடம் மாற்றப்படாது அனைத்து மத்திய சிறைச் சாலைகளிலும் திறந்தவெளி சிறைச்சாலை உருவாக்கிட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ரகுபதி.
14 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு பத்து வருடங்கள் நிறைவு பெற்று இருந்தால் நன்னடத்தையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நிபந்தனைக்கு உட்பட்டு மற்ற கைதிகளை விடுவிப்பது குறித்து அரசு மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்.
எல்லோருக்கும் பொதுவான முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் பிரைசன் பசார் உற்பத்தி நோய்த்தொற்று காலகட்டத்தில் குறைந்து இருந்தது தற்சமயம் அது அதிகரித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ரகுபதி.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா மீது அவதூறு வழக்கில் அரஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது வரையில் அவர் கைது செய்யப்படாதது தொடர்பான கேள்விக்கு பதில் தெரிவித்த அமைச்சர், பிணையில் வர இயலாத பிடிவாரண்டு உத்தரவு காவல்துறையினருக்கு கிடைக்க வேண்டும் ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது என்று அவர் கூறியிருக்கிறார்.