Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீமானா..? வேல்முருகனா..? யார் அடுத்த டார்கெட்..? எச்.ராஜா ஆவேசம்!!

சீமானா..? வேல்முருகனா..? யார் அடுத்த டார்கெட்..? எச்.ராஜா ஆவேசம்!!

சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்த நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. நெல்லை கண்ணனை கைது செய்த போது பாசகவினர் தாக்கிய சம்பவங்களும் நடந்தன.

இதையடுத்து, திருப்புவனம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, கொலைகார கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் போடும் பிரியாணிக்காக நாக்கை தொங்கப் போட்டு கொண்டு இருக்கும் வேல்முருகனுக்கு என்னைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என்று எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று பொது மேடையில் பேசிய சீமானையும், அவரது கட்சி ஆட்களையும் கைது செய்ய வேண்டும் என கூறினார். நெல்லை கண்ணன் பேசியதற்கும் சீமான் பேசியதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆகவே, சீமானை ஏன் காவல்துறை கைது செய்யவில்லை என்று கேள்வி கேட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை ஆதரிப்பதாக கூறினார்.

Exit mobile version