சர்ச்சையில் சிக்கிய எச் ராஜா! குவியும் புகார்கள்!

0
121

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை சிறைத் துறையில் பணிபுரிந்தவர் திருச்சி சிறையில் அவர் பணிபுரிந்து வந்தார் எனவும், அவர் இரு உயிர் இழப்பு ஈடு செய்ய இயலாதது என்றும், நடிகர் சிவகார்த்திகேயன் பலமுறை ஊடகங்களின் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் தகப்பனார் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பாபநாசம் சட்டசபை உறுப்பினர் ஜவாஹிருல்லா தான் காரணம் எனவும், எச் ராஜா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்த கருத்து மாபெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. ஏனென்றால் சிவகார்த்திகேயனின் தந்தை பல வருடங்களுக்கு முன்பு இயற்கையாக மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆகவே அதனைக் குறிப்பிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் விரோதம் ஏற்படும் விதத்தில் அவதூறு பரப்புவதாக ஆட்சி ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற அவதூறு கருத்துக்களை தெரிவித்து விட்டு மன்னிப்பு கேட்பதை ராஜா வழக்கமாக கொண்டிருப்பதாகவும், இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அந்த கட்சி வலியுறுத்தி இருக்கிறது. எச் ராஜா மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் மனிதநேய மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் புகார் கொடுத்து இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது.