BJP TVK: பாரத ஜனதா கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் இருவரும் திமுகவின் B டீம் என மாறிமாறி கூறி வருகின்றனர். சமீபத்தில் விஜய் கூட பல பிரச்சனைகள் நாட்டில் நிலவும் போது ஹாஷ்டாக் போட்டுக்கொண்டு சோசியல் மீடியாவில் போட்டியிட்டு நாடகம் நடிப்பதாக திமுக மற்றும் பாஜக வை கூறினார். திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் பாஜக இருப்பதாக தொடர்ந்து தவெக கூறி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை உள்ளிட்டோர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகவே விஜய்யை களத்தில் இறக்கியுள்ளனர்.
இவர்கள் திமுகவின் B டீம் என்று கூறினார். அதுமட்டுமின்றி, திரைப்படங்களில் மது புகை பிடித்தல் போன்றவற்றை செய்து காட்டி விட்டு எப்படி இங்கு அரசியல் பேச முடியும், 50 வயதில் தான் புத்தர் எழுப்பி இவரை அரசியல் செய்ய சொன்னாரா, 30 வயதில் எங்கே சென்றார்?? இன்று பல கேள்விகளை சரமாரியாக கேட்டுள்ளார். யாராவது சினிமா படப்பிடிப்பில் இருந்து கொண்டு அரசியல் செய்வதுண்டா?? இவர் மட்டும்தான் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்வதாகவும் கிண்டல் அடித்தார்.
அந்த வகையில் இவர் சினிமாவில் இருந்து கொண்டு நடிகைகள் இடுப்பை கிள்ளி கொண்டு அரசியல் செய்து வருகிறார். என்னைப்போல் களம் காண்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகப் பொருளாளர் வெங்கட் என்பவர், கட்டாயம் 2026 ஆம் ஆண்டு தங்களை எதிர்பவர்கள் அழிந்து போவார்கள் என்று கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் ஹெச். ராஜாவிடம் கேள்வி எழுப்பினார். பதிலளிக்கும்வகையில் அவர் கூறியதாவது, எனக்கு வெங்கட் யார் என்பதே தெரியாது” நீங்கள் சொல்லி தான் தெரியும், முதலில் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி டெபாசிட் வாங்கட்டும் நான் சவால் விடுகிறேன்!! என்று பேசினார்.
எனது தலைவர் அண்ணாமலை விஜய் அரசியல் வேலையாக சினிமாவில் என்ன செய்தார் என்பதை கூறிவிட்டார், அதனால் நான் திரும்பிக் கூற வேண்டிய அவசியமில்லை. மேற்கொண்டு செய்தியாளர், தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் குளறுபடி நடந்துள்ளதாக மூன்று பேர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்தும், குறிப்பாக அதில் லியோனி சம்பந்தப்பட்டது ரீதியாக கேள்வி எழுப்பினர். சினிமாவில் பாட்டு பாடுகிறவரையெல்லாம் கூப்பிட்டு பாடநூல் கழகத்திற்குள் விட்டால் இப்படித்தான் நடக்கும். விஜய் போல் இவர் மற்றோர் இடுப்புகிள்ளி என்று விமர்சித்து பேசியுள்ளார்.