முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை இழிவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சங்கர் நகர் காவல் துறையினர் கிஷோர் கே சாமியை கைது செய்திருக்கிறார்கள்.
திமுக தகவல் தொழில்நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கிஷோர் கே ஸ்வாமி என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக ஊடகங்களில் பங்கேற்று கொள்பவர். தன்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் பதிவிட்டு இருக்கிறார் என்று கடந்த 10ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் கிஷோர் கே சாமி கைதுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டி தாம்பரம் நீதித்துறை நீதிபதி அனுப்பிரியா அவர்களின் மாதவரம் இல்லத்தில் கிஷோர் கே சாமி அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு 15 தினங்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக அவதூறாக பேசி வரும் திமுகவைச் சார்ந்தவரும் இதேபோல கைது செய்யப்படுவார்கள்? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா தன்னுடைய வலைப்பதிவில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இவரைக் கைது செய்தது நியாயம் என்றால் இதற்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பல முக்கிய தலைவர்களையும் மிகக் கேவலமாக விமர்சனம் செய்து திமுகவினரை என்னவென்று சொல்வது என்ற கருத்தை மாநிலம் முழுவதும் உலா வரத் தொடங்கியிருக்கிறது.
ஒரு நாட்டின் பிரதமரையே மிகக் கேவலமாக விமர்சனம் செய்தவர்கள் தான் திமுகவை சேர்ந்தவர்கள் அப்படிப் பார்த்தோமானால் இவரை கைது செய்வதற்கு முன்னர் திமுகவைச் சார்ந்தவர்களை தான் கைது செய்திருக்க வேண்டும் என்ற கருத்தும் தமிழகத்தில் உலாவி வருகிறது. அதோடு திமுகவினருக்கு ஒரு நியாயம் கிஷோர் கே சாமிக்கு ஒரு நியாயமா என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கிஷோர் கே சாமி கைது! கொந்தளித்த எச் ராஜா!
