Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்புளூயன்சா காய்ச்சல் முதல் உயிர் பலி! குஜராத்தில் தீவிர கண்காணிப்பு

#image_title

இன்புளூயன்சா காய்ச்சல் முதல் உயிர் பலி! குஜராத்தில் தீவிர கண்காணிப்பு

 

நாடுமுழுவதும் கடந்த சில மாதங்களாக இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது.

 

இந்த இன்புளூயன்சா ஏ வைரஸ் என்பது அதன் துணை வைரசாக அடையாளம் காணப்படும் எச்3 என்2 எனப்படும் வைரஸ் என அழைக்கப்படுகிறது.

 

இந்த எச்3என்2 எனப்படும் வைரஸ் ஆனது வயது முதிர்ந்தோர் மற்றும் பதினைந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என இந்த இரு பிரிவினரையே அதிகம் தாக்கும் என்று மருத்துவ தகவல்கள் தெரிபடுத்துகின்றன.

 

இந்த இன்புளூயன்சா எச்3என்2 காய்ச்சலுக்கு முதல் உயிர் பலியாக கர்நாடக மாநிலத்தில் 82 வயதுடைய முதியவர் ஒருவர் பலியானார்.

 

இதனை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் அரியானா மாநிலங்களில், இந்த காய்ச்சலுக்கு உயிர் பலிகள் பதிவாக தொடங்கியது.

 

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இந்த எச்3என்2 இன்புளூயன்சா காய்ச்சலுக்கு முதல் பலியாக 58 வயது பலியாகியுள்ளார்.

 

இந்த மரணங்களின் மூலம் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

 

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் 5-ம் தேதி வரை, இந்த எச்3என்2 இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக 451 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இந்த வைரஸ் தீவிரமாக பரவுவது தொடர்பாக, அணைத்து மாநிலங்களை கவனத்தோடு கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version