Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முடி கொட்டாது ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய கறிவேப்பிலை கீர்!

முடி கொட்டாது ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய கறிவேப்பிலை கீர்!

அனைத்து சமையல்களிலும் உபயோகப்படுத்தும் ஒரு பொருள்தான் கறிவேப்பிலை. இதன் பலன்கள் சொல்ல முடியாத அளவு அபரீதமானவை. ஆனால் நாம் கறிவேப்பிலையின் மகிமையை அறியாமல் அதனை ஒதுக்கி வைக்கிறோம்.

கருவை உருவாக்கும் வேப்பிலை என கறிவேப்பிலையை சித்தர்கள், மகான்கள், ஞானிகள், கூறுகின்றனர். ஏனெனில் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன கண் பார்வைக்கு உகந்தது. உடலை குளிர்ச்சி அடைய செய்யும். தலை முடி வளர்ச்சிக்கு நல்லது. அல்சரை குறைக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும்.சுகரை குறைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.என ஏராளமாக கறிவேப்பிலையின் பயன்களை சொல்லிக் கொண்டு செல்லலாம்.

இத்தகைய நன்மை வாய்ந்த கறிவேப்பிலை கீர் செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையானவை:
கறிவேப்பிலை – ஒரு கப்
தேங்காய் -ஒரு கப்
நாட்டு சர்க்கரை – அரை கப்

முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காயை போட்டு துருவிக் கொள்ளவும். அடுத்து தேவையான அளவு ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை அதில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.

இதை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்ததை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். இதை ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.

நான்கு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். சளி பிடிக்கும் பொழுது மட்டும் இதை தவிர்ப்பது நல்லது.
தினமும் காலையில் சாப்பிட்டு வர சுகர் என்பது வரவே வராது. தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

Exit mobile version