கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்!
கூந்தல் கருமையாக இருந்தால் அழகு கூடும். இந்த கூந்தல் அடர் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர வீட்டு முறையில் ஹேர் ஆயில் தயாரித்து தினமும் பயன்படுத்தி வாருங்கள். இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை – 1/4 கப்
2)தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
3)செம்பருத்தி பூ – 10
4)செம்பருத்தி இலை – 1/4 கப்
5)குப்பைமேனி – 1/4 கப்
6)கீழா நெல்லி இலை – 1/4 கப்
7)கற்றாழை துண்டு – 5
8)கறிவேப்பிலை – 1/4 கப்
9)மருதாணி – 1/4 கப்
10)வெந்தயம் – 3 தேக்கரண்டி
செய்முறை:-
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து சிறிது நேரம் உலர்த்திக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் .
எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மிதமான தீயில் எண்ணையை காய்ச்சவும்.
10 நிமிடங்களுக்கு காய்ச்சி ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும். இந்த எண்ணெயை தலை முடிகளுக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.