Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைமுடியை கருமையாக்கும் ஹேர் பேக்!! ஜஸ்ட் ஒன் டைம் முயற்சித்தாலே சொல்யூசன் கிடைக்கும்!!

இன்று இளம் வயதிலேயே தலை நரைத்தல் பிரச்சனையை பலரும் எதிர்கொள்கின்றனர்.அதிக பித்தம்,கெமிக்கல் பொருட்கள்,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் தலைமுடி வெள்ளையாகிவிடுகிறது.இந்த வெள்ளைமுடியை கருமையாக்க வேப்பிலை,கறிவேப்பிலை,மருதாணி உள்ளிட்ட இலைகளுடன் மேலும் சில பொருட்களை கொண்டு இயற்கையான ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

**வேப்பிலை – ஒரு கைப்பிடி
**தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
**வைட்டமின் E மாத்திரை – ஒன்று
**தயிர் – ஒரு தேக்கரண்டி
**கறிவேப்பிலை – கால் கைப்பிடி
**மருதாணி இலை – கால் கைப்பிடி

செய்முறை:-

1)முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து வையுங்கள்.

2)பிறகு கறிவேப்பிலை,மருதாணி இலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

3)அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து வேப்பிலை,மருதாணி இலை மற்றும் கறிவேப்பிலையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.

4)பிறகு இந்த பேஸ்டை கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தயிர்,இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்,ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

5)இந்த பேஸ்டை இரண்டு மணி நேரம் ஊறவிடுங்கள்.பிறகு இதை தலையில் மயிர்க்கால்களில் படும்படியாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.இந்த பேஸ்டை தலைக்கு அப்ளை செய்வதற்கு முன்னர் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்து டிரையாக வைக்க வேண்டும்.பின்னரே இந்த ஹேர் டையை தலைக்கு அப்ளை செய்ய வேண்டும்.

6)ஒரு மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.இதுபோன்று வாரம் இரண்டு முறை செய்து வந்தால் தலைமுடி கருமையாக மாறும்.இந்த ஹேர் பேக் தலைமுடியை கருமையாக்குவதோடு அவற்றை வலிமையாக்குகிறது.

Exit mobile version