Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில்,
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப். 21 முதல் 26 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நாளை (செப்.15) முதல் ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விண்ணப்ப எண்ணை தவறவிட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் ஹால்டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்ட தேர்வு மையத்தில் செப்.17, 18 ஆம் தேதிகளில் அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். மேலும், தேர்வு அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version