கை கால் மூட்டு மற்றும் முதுகு வலி.. 7 தினங்களில் குணமாக இந்த இலையில் கசாயம் வச்சி குடியுங்கள்!
உங்களில் பலருக்கு காரணமே இல்லாமல் அடிக்கடி கை கால் மூட்டு மற்றும் முதுகுப் பகுதியில் ஒரு வித வலி ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்கள்.இந்த வலி தொடர்ந்து ஏற்பட்டால் அதை சாதாரண ஒன்றாக கருதாமல் உரிய தீர்வு காண்பது நல்லது.
கடினமான உடற்பயிற்சி,உடல் பருமன்,ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்தல்,நீண்ட தூர பயணம்,ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் எலும்பு தேய்மானம்,எலும்பு பகுதியில் அடி படுதல்,ஜவ்வு தேய்மானம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதனால் கை கால்,மூட்டு மற்றும் முதுகு பகுதியில் அதிகளவு வலி ஏற்பட்டு அவை தீராத தொல்லையாக மாறிவிடுகிறது.
எனவே இந்த பாதிப்புகள் எதுவும் தங்களை அண்டாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கசாயத்தை செய்து குடித்து வருவது நல்லது.
தேவையான பொருட்கள்:-
*முருங்கை இலை
*மஞ்சள் தூள்
*சீரகம்
*பூண்டு
*மிளகு
கசாயம் செய்யும் முறை:-
முதலில் ஒரு கப் முருங்கை இலையை தண்ணீர் போட்டு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பல் பூண்டை தோலுடன் உரலில் போட்டு இடிக்கவும்.அதேபோல் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் 5 மிளகை கொரகொரப்பான பதத்திற்கு இடித்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு அலசி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலையை போட்டு கொதிக்க விடவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு இடித்து வைத்துள்ள பூண்டு,சீரகம்,மிளகை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.ஒரு கப் நீர் சுண்டி 1/2 கப் நீராக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இதை ஒரு மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் ஊற்றி குடிக்கவும்.இந்த முருங்கை இலை கஷாயம் கை கால் மூட்டு மற்றும் முதுகு வலியை ஒரே வாரத்தில் குணமாக்கி விடும்.